மத்திய அமைச்சரவை
பலதுறை சார்ந்த இணையதளம் மற்றும் அதனைப் பயன்படுத்துவோரின் தேசிய இயக்கத்தைத் தொடங்க அமைச்சரவை ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
06 DEC 2018 9:14PM by PIB Chennai
பலதுறை சார்ந்த இணையதளம் மற்றும் அதனை பயன்படுத்துவோரின் தேசிய இயக்கத்தைத் தொடங்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் ரூ.3,360 கோடி மதிப்பில் ஐந்தாண்டு காலத்திற்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையால் அமல்படுத்தப்படும்.
சமூகத்தில் அதிகரித்து வரும் தொழில்நுட்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், சர்வதேசப் போக்குகளையும் அடுத்தத் தலைமுறை தொழில்நுட்பங்களுக்கான முன்னணி நாடுகளின் திட்டங்களைக் கணக்கில் கொள்வதற்கும் தேசிய இயக்கம் பயன்படும்.
சிபிஎஸ்-ல் தொழில்நுட்ப மேம்பாடு, செயல்முறை மேம்பாடு, மனிதவள மேம்பாடு, திறன் விரிவாக்கம், தொழில் முனைதல், புதுமைத் தொழில் வளர்ச்சி, மற்றும் இவற்றோடு தொடர்புடைய தொழில்நுட்பங்களை எதிர்கொள்வதற்கு இது ஒரு விரிவான இயக்கமாக இருக்கும். 15 தொழில்நுட்ப கண்டுப்பிடிப்பு மையங்கள், 6 செயல்முறை மேம்பாட்டு மையங்கள், 4 தொழில்நுட்பப் பரிமாற்ற ஆய்வுப் பூங்காக்கள் ஆகியவற்றை உருவாக்குவது இந்த இயக்கத்தின் நோக்கமாகும்.
பலதுறை சார்ந்த இணையதளம் மற்றும் அதனைப் பயன்படுத்துவோரின் தேசிய இயக்கம் என்பது மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள், தொழில்துறை, கல்வி நிறுவனங்கள் என ஒட்டுமொத்த இந்தியாவையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
--------------------
எஸ் எம் பி - கீதா
(வெளியீட்டு அடையாள எண்: 1554999)
வருகையாளர் எண்ணிக்கை : 221