மத்திய அமைச்சரவை
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் ஆகிய துறைகளில் இந்தியா மற்றும் உஸ்பேகிஸ்தான் இடையான ஒத்துழைப்பு உடன்பாடு குறித்து மத்திய அமைச்சரவையிடம் தெரிவிப்பு
Posted On:
22 NOV 2018 1:34PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையிடம் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் ஆகிய துறைகளில் இந்தியா மற்றும் உஸ்பேகிஸ்தான் இடையே ஒத்துழைப்பிற்கான உடன்பாடு குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்த உடன்பாடு, புது தில்லியில், பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் உஸ்பேகிஸ்தான் அதிபர் திரு. ஷவ்கத் மிராயோயேவ் முன்னிலையில், இந்தாண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி கையெழுத்தானது. இந்தியா சார்பில் மத்திய அறிவியல் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தனும் மற்றும் உஸ்பேக் சார்பில் புதிய கண்டுபிடிப்புகள் வளர்ச்சி துறை அமைச்சர் திரு. இப்ரோஹிம் அப்துர்க்கமனோவும் கையெழுத்திட்டனர்.
பலன்கள்:
இந்த உடன்பாடு, இருநாடுகளின் உறவை மேம்படுத்தி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளின் வளர்ச்சியை வலுப்படுத்தும். அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் ஆகிய துறைகளில் இடையே ஒத்துழைப்பை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும். இந்தியா மற்றும் உஸ்பேகிஸ்தானில் உள்ள அறிவியல் அமைப்புகளின் ஆராய்ச்சியாளர்கள், கல்வி நிறுனவங்கள், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி சோதனை மையங்கள், தொழிற்சாலைகள் ஆகியவை இதன் பங்குதார்களாக செயல்படுவார்கள். வேளாண் மற்றும் உணவு அறிவியல்,தொழில்நுட்பம், பொறியியல் அறிவியல், தகவல் மற்றும் தொடர்பு தொழில் நுட்பம், கணிதம், தரவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் மருத்துவ தொழில்நுட்பம், பொருள் அறிவியல், வாழ்வியல், உயிரித் தொழில்நுட்பம், இயற்பியல் மற்றும் வானியற்பியல், எரிசக்தி, நீர்,பருவநிலை மற்றும் இயற்கை வளங்கள் ஆகிய துறைகள் உடனடியாக ஒத்துழைப்பு கூட்டணி அமைப்பதற்கான திறன் கொண்ட துறைகளாக கண்டறியப்பட்டுள்ளன .
*****
(Release ID: 1553480)