மத்திய அமைச்சரவை

சுற்றுலாத் துறையில் இந்தியா மற்றும் கொரியா இடையேயான உறவினை வலுபடுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 01 NOV 2018 11:42AM by PIB Chennai

சுற்றுலாத் துறையில் இந்தியா மற்றும் கொரியா இடையேயான உறவினை வலுபடுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திட பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய குறிக்கோள்கள்:

  1. சுற்றுலா துறையில் இருதரப்பு உறவினை விரிவுபடுத்துல்
  2. சுற்றுலா தொடர்பாக உள்ள தகவல்கள் மற்றும் தரவுகளின் பரிமாற்றத்தை அதிகரித்தல்
  3. ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்ட சுற்றுலா துறை பங்குதாரர்களுக்கு இடையே ஒத்துழைப்பை ஊக்கப்படுத்துதல்
  4. ஒத்துழைப்பிற்காக மனித வள மேம்பாட்டுத் துறையில் பரிமாற்ற திட்டங்களை உருவாக்குதல்
  5. சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளில் முதலீடுகளை ஊக்கப்படுத்துதல்
  6. இரு-வழி சுற்றுலாவை ஊக்கப்படுத்த சுற்றுலா ஏற்பாட்டாளர்கள்/ பத்திரிகையாளர்கள்/ திறனாய்வாளர்கள் ஆகியவர்களை இருநாடுகளையும் பார்வையிட செய்தல்
  7. விளம்பரம், சுற்றுலா தளங்களின் மேம்பாட்டை சந்தைப்படுத்தல் மற்றும் மேலாண்மை குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுதல்.
  8. இரு நாடுகளிலும் நடைபெறும் சுற்றுலா கண்காட்சிகளில் பங்கேற்பதை ஊக்குவித்தல்
  9. பாதுகாப்பான, கௌரவமான மற்றும் நிலையான சுற்றுலாவை ஊக்குவித்தல்

*****



(Release ID: 1551506) Visitor Counter : 182