மத்திய அமைச்சரவை

வேளாண்மை மற்றும் அதன் சார்பான துறைகளில் இந்தியா மற்றும் லெபனான் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

प्रविष्टि तिथि: 10 OCT 2018 1:38PM by PIB Chennai

வேளாண்மை மற்றும் அதன் சார்பான துறைகளில் இந்தியா மற்றும் லெபனான் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

வேளாண் துறையிலான இந்த ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கும் பயனளிக்கும். இரு நாடுகளிலும் உள்ள சிறந்த வேளாண் நடைமுறைகளைப் புரிந்துகொள்ளவும், விவசாயிகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் சர்வதேச சந்தையில்  சிறந்து விளங்கவும் இந்த ஒப்பந்தம் துணை புரியும்.

உலகெங்கும் உள்ள சிறந்த சந்தை மற்றும் விவசாய நடைமுறைகளைத் தெரிந்துகொண்டு விவசாய உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பயன்படும். இந்த ஒப்பந்தம்  உற்பத்தியை அதிகரிக்க புது முயற்சிகள் மற்றும் தொழில்நுட்பங்களை கொண்டுவந்து உணவு பாதுகாப்பினை பலப்படுத்த வழிவகுக்கும்.

 

*****


(रिलीज़ आईडी: 1549201) आगंतुक पटल : 124
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , Bengali , Bengali , Assamese , Gujarati , Kannada , Malayalam