மத்திய அமைச்சரவை
போபாலுக்கு பதிலாக, செகூர் மாவட்டத்தில் மனநல மறுவாழ்வுக்கான தேசிய நிறுவனம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
03 OCT 2018 6:55PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 16.05.2018 அன்று எடுக்கப்பட்ட முடிவில் சிறு மாற்றம் செய்து, மத்திய பிரதேசம் போபாலுக்கு பதிலாக, செகூர் (போபால் – செகூர் நெடுஞ்சாலை) மாவட்டத்தில் மனநல காப்பகத்திர்கான தேசிய நிறுவனத்தை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.
பலன்கள்:
நாட்டில் மனநல மறுவாழ்வு பிரிவில் தேசிய நிறுவனம் அமைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். மனித வளத் துறையில் திறன் மேம்பாட்டுக்கான சிறந்த நிறுவனமாகவும், மனநல காப்பகம் தொடர்பான ஆய்வுகளுக்கும், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் நலம் அடைய சிறந்த செயல்முறைகளை பரிந்துரைக்கும் அமைப்பாகவும் இந்த நிறுவனம் விளங்கும்.
***********
(வெளியீட்டு அடையாள எண்: 1548452)
வருகையாளர் எண்ணிக்கை : 181