மத்திய அமைச்சரவை

சாலை போக்குவரத்து மற்றும் சாலை போக்குவரத்து தொழில் துறைகளில் இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 03 OCT 2018 7:00PM by PIB Chennai

சாலை போக்குவரத்து மற்றும் சாலை போக்குவரத்து தொழில் துறைகளில் இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பிற்கான  புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரஷ்யா அதிபர் இந்தியாவிற்கு வருகை தரும்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறைகளில் ஒத்துழைப்பு ஏற்படுத்தாவும் மேம்படுத்தவும் இரு நாடுகளும் கலந்துரையாடி முடிவு செய்து சாலை போக்குவரத்து மற்றும் சாலை போக்குவரத்து தொழில் துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை  ஏற்படுத்தியுள்ளன.

இந்த ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளும்  சாலை போக்குவரத்து மற்றும் சாலை போக்குவரத்து தொழில் துறைகளில் பயன்பெறும். சாலை போக்குவரத்து மற்றும் அதிநவீன போக்குவரத்து முறை ஆகிய துறைகளில்நீண்ட கால மற்றும் சிறந்த இருத்தரப்பை உறவினை உருவாக்க ரஷ்யா உடனான அதிகரித்த ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றம் உதவும். நாட்டில் சாலை உட்கட்டமைப்பு, சாலை இணைப்பு மேலாண்மை, போக்குவரத்து கொள்கை, தொழிநுட்பம், கட்டுமானத்திற்கான தரநிலைகள், நெடுஞ்சாலை  செயல்பாடு ஆகியவற்றை திட்டமிடவும் நிர்வாக செய்யவும் இந்த ஒப்பந்தவும் உதவும். மேலும், இந்தியா மற்றும் ரஷ்யா இடையே உள்ள இருத்தரப்பு உறவினை மேலும் வலுப்படுத்த இந்த ஒப்பந்தம் பயன்படும்



(Release ID: 1548446) Visitor Counter : 160