மத்திய அமைச்சரவை
இந்திய பட்டய கணக்கர் நிறுவனம் மற்றும் கென்யா சான்றுபெற்ற பொதுக் கணக்கர் நிறுவனம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
26 SEP 2018 4:14PM by PIB Chennai
இந்திய பட்டய கணக்கர் நிறுவனம் (ஐ.சி.ஏ.ஐ.) மற்றும் கென்யாவின் சான்றுபெற்ற பொதுக் கணக்கர் நிறுவனம் (ஐ.சி.பி.ஏ.கே.) இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கூட்டு ஆராய்ச்சி மூலம் அறிவாற்றலை பகிர்தல், தரமான உதவி, திறன் மற்றும் திறன் வளர்த்தல், பயிற்சி கணக்கர் பரிமாற்ற திட்டம், தொடர் தொழில் முறை மேம்பாட்டு கல்விகள், பயிலரங்குகள் மற்றும் மாநாடுகள் நடத்துதல் ஆகிய துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பினை உருவாக்க இந்த ஒப்பந்தம் உதவும்.
விவரங்கள்:
- பணி அட்டவணை மூலம் ஒப்புக்கொள்ளப்பட்ட முறைசாரா பணியிடங்கள் மூலம் இந்திய பட்டய கணக்கர் நிறுவனம் (ஐ.சி.ஏ.ஐ.) மற்றும் கென்யாவின் சான்றுபெற்ற பொதுக் கணக்கர் நிறுவனம் (ஐ.சி.பி.ஏ.கே.) ஆகியவற்றில் பதிவு செய்துள்ள நிறுவனங்களின் ஊழியர்கள் தங்களின் அறிவு மற்றும் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு உருவாக்கப்படும்.
- பதிவு செய்துள்ள நிறுவனங்களுக்கிடையே ஐ.சி.ஏ.ஐ./ஐ.சி.பி.ஏ.கே.-ன் ஒத்துழைப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான கூட்டு நடவடிக்கைகளை ஊக்குவித்தல் குறித்து இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஐ.சி.ஏ.ஐ. மற்றும் /ஐ.சி.பி.ஏ.கே. இணைந்து முக்கிய முயற்சிகள் மற்றும் பயிற்சி கணக்கர் பரிமாற்ற திட்டங்களை ஆகியவற்றை மேற்கொள்ளும்
முக்கிய விளைவுகள்:
இந்தியா கென்யா நாட்டின் ஆறாவது பெரிய வர்த்தக பங்குதாரர் மற்றும் பெரிய ஏற்றுமதியாளர் ஆகும். மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் 2017 ஆம் ஆண்டு ஆப்பிரிக்கா நாடுகளில் சிறந்த நாடுகளின் பட்டியலில் கென்ய பொருளாதாரமும் இடம்பெறும் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது. கென்யாவின் பெரும்பாலும் பரவலாக்கப்பட்ட பொருளாதாரத்தை கொண்டுள்ளது. மேலும், கென்ய பொருட்களை இந்திய சந்தையில் விற்கும் வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கத்தை உடையது. அதேசமயம் கென்யாவின் முதல் வெளிநாட்டு வர்த்தக பங்குதாரராகும் வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறது.
ஆப்பிரிக்க நாடுகளில் சிறந்த நாடுகளில் ஒன்றாக கென்யாவின் பொருளாதாரம் இருக்கிறது என்பதையும், அண்மையில் இரு நாடுகளுக்கு இடையே உருவாகியுள்ள நம்பகத்தன்மையையும் முதலீடுகளையும், இந்தியாவின் பட்டய கணக்கர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்துள்ளனர் என்பதையும் கருத்தில் கொண்டு பார்க்கையில் இந்திய பட்டய கணக்கர்களுக்கு கென்யாவில் அதிகமான தொழில் முறை ரீதியான வாய்ப்புகள் உண்டு.
*****
(Release ID: 1547486)