மத்திய அமைச்சரவை

ஜம்மு & காஷ்மீரில் உள்ள கிராமப்புற ஏழைக் குடும்பத்தினர் உற்சாகம்

தீன்தயாள் அந்தியோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தை செயல்படுத்த ஜம்மு & காஷ்மீருக்கான சிறப்புத் தொகுப்பு நீட்டிப்பு

தீன்தயாள் அந்தியோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தை வறுமைக் கோட்டுடன் இணைக்காமல் செயல்படுத்த ஜம்மு & காஷ்மீருக்கு நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 19 SEP 2018 1:22PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஜம்மு & காஷ்மீரில் தீன்தயாள் அந்தியோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சிறப்புத் தொகுப்பை செயல்படுத்துவதற்கான கால வரம்பை, மேலும் ஓராண்டுக்கு 2018-19 வரை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

     தீன்தயாள் அந்தியோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சிறப்புத் தொகுப்பை, வறுமைக் கோட்டுடன் இணைக்காமல் செயல்படுத்துவதற்கான நிதியை தேவையின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யவும் மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட ரூ.755.32 கோடி நிதியை இம்மாநிலத்தில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு ஏழைக் குடும்பத்தினரை சென்றடைவதற்கான கால அவகாசம் தான் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதால் கூடுதல் நிதிச்சுமை ஏதும் ஏற்படவில்லை. 2018-19 ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்காக ரூ.143.604 கோடி தேவைப்படும்.

விளைவுகள்:

  • இம் மாநிலத்தில் உள்ள கிராமப்புற ஏழைக் குடும்பத்தினர் குறிப்பிட்ட கால வரையறைக்குள் (மூன்றில் இரண்டு பங்கு மக்கள் பயனடையும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது) பயனடைய இத்திட்டம் உதவும்.
  • 2011 சமூக பொருளாதார சாதி வாரி கணக்கெடுப்பில் இடம் பெற்றுள்ள பிரிவினரில், தானாக சேர்க்கப்படும் பிரிவின் கீழ் மக்கள் சேர்க்கப்படுவதை உறுதி செய்யும்.
  • ஜம்மு & காஷ்மீரில் உள்ள அனைத்து வட்டங்களிலும் தீன்தயாள் அந்தியோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் செயல்படுத்தப்படுவதையும், சமுதாய இணைப்பு, சமுதாய மேம்பாடு, வாழ்வாதார மேம்பாட்டை உறுதி செய்வதன் மூலம், இம் மாநிலத்தில் வறுமை ஒழிப்புக்கு வகை செய்யப்படும்.

பின்னணி:

ஜம்மு & காஷ்மீரில் நிலவும் அசாதாரண சூழல் மற்றும் தவிர்க்க முடியாத காரணங்களால், 2013 மே மாதத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட சிறப்புத் தொகுப்பை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை. தீன்தயாள் அந்தியோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தை வறுமைக் கோட்டுடன் இணைக்காமல் செயல்படுத்துவதற்கு தொடர்ந்து நிதியுதவி அளிப்பதுடன், ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட சிறப்புத் தொகுப்பை நீட்டிப்பது பற்றி பரிசீலிக்குமாறு, தற்போது மாநில அரசு மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது. எனவே, அமைச்சரவை அளித்துள்ள இந்த ஒப்புதல், ஜம்மு & காஷ்மீரின் கிராமப்புறங்களில் உள்ள ஏழைக் குடும்பத்தினருக்கு ஊக்கமளிப்பதாக அமையும்.



(Release ID: 1546664) Visitor Counter : 99