மத்திய அமைச்சரவை

பிரிக்ஸ் நாடுகளுடனான வங்கிகள் மற்றும் இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கி இடையே கூட்டு ஆராய்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 12 SEP 2018 4:29PM by PIB Chennai

பிரிக்ஸ் நாடுகளுடனான வங்கிகள் மற்றும் இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கி இடையே கூட்டு ஆராய்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு இன்று புதுதில்லியில் நடைபெற்ற பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கி மற்றும் பிரிக்ஸ் நாடுகளுடனான வங்கிகளுக்கு இடையே டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது.  பிரிக்ஸ் நாட்டு வங்கிகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு அமைப்பில் இடம்பெற்றுள்ள வங்கிகளுக்கும் இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கிக்கும் இடையே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.  

தாக்கம்

     பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே நிதித்துறையில் எதிர்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு சவால்களுக்கு தீர்வுகாண புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் தொழில்நுட்பம் பயன்படும். இந்த நாடுகளுக்கு இடையிலான செயல்பாட்டு திறனை மேம்படுத்த கூட்டு ஆராய்ச்சி முயற்சிகளை மேற்கொண்டு எந்தப் பிரிவில் வர்த்தக ரீதியில் தொழில்நுட்ப மேம்பாடு மேற்கொள்ள வேண்டுமோ, அதனை மேற்கொள்ள இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.

பின்புலம்

     பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் தங்கள் நாடுகளுக்கு இடையே டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு, சீனாவில் ஸியாமன்  பிரகடனத்தில் கையெழுத்திட்டனர். உலகப் பொருளாதார மேம்பாட்டை விரைவுபடுத்தவும், டிஜிட்டல் பொருளாதாரத்தின் பலன்கள் ஒவ்வொருவரையும் சென்றடைவதை உறுதிப்படுத்துவதற்கும் ஸியாமன் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.  அதன் அடிப்படையில் பிரிக்ஸ் நாட்டு வங்கிகளுக்கும், ஏற்றுமதி-இறக்குமதி வங்கிக்கும் இடையே தொழில்நுட்ப ரீதியில் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்த கூட்டு ஆராய்ச்சி செய்ய யோசனை தெரிவிக்கப்பட்டிருந்தது.

*****



(Release ID: 1545824) Visitor Counter : 279