கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
வேலை வாய்ப்பு அளிப்பதாக கூறி ஏமாற்றும் சாகர்மாலா பெயரில் போலி இணையதளம்
Posted On:
06 SEP 2018 11:48AM by PIB Chennai
வேலை தேடும் நபர்களுக்கும் சாகர்மாலா திட்டத்தின் உண்மையான பங்குதாரர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் http://sagarmala.org.in/ என்ற போலியான இணைய முகவரியை அனுப்பப்படுவதாக மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த போலி இணையதளம் சாகர்மாலா திட்டத்தின் உண்மையான இணையதளம்போல் காட்சியளித்தாலும், பொறியாளர் மற்றும் டிப்ளமோ பயிற்சியாளர்கள் குறித்த போலி விளம்பரம் அதில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற போலியான மற்றும் தவறான விளம்பரங்களை நம்பவேண்டாம் என்று கப்பல் துறை அமைச்சகம் எச்சரிக்கிறது. இதுபோன்ற ஏமாற்றத்தக்க, தவறான, மாறாக சித்தரிக்கப்பட்ட, உண்மைக்கு புறம்பான, தகவல்களைப் பரப்புவது தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டங்களின் பிரிவுகளின்கீழ் தண்டனைக்குரிய செயலாகும். இது தொடர்பாக விரைவான மற்றும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சாகர்மாலா திட்டத்தின் அனைத்து பங்குதாரர்களுக்கும் http://www.sagarmala.gov.in/ என்பதே சாகர்மாலாவின் உண்மையான இணையதளம் ஆகும் என்பதை நினைவுகூர்கிறோம்.
*****
(Release ID: 1545117)
Visitor Counter : 160