மத்திய அமைச்சரவை

இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் – பஹ்ரைன் புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 18 JUL 2018 5:31PM by PIB Chennai

மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் பிரதமர் திரு. நரேநதிர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில், இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்துக்கும் (Institute of Chartered Accountants of India) பஹ்ரைன் நாட்டில் உள்ள பஹ்ரைன் வங்கியியல் மற்றும் நிதிய நிறுவனத்துக்கும் (Bahrain Institute of Banking and Finance) இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

முக்கிய அம்சங்கள்:

  1. இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் (ICAI) பஹ்ரைன் வங்கியியல் மற்றும் நிதிய நிறுவனத்தின் நிதி, வங்கியியல் (BIBF) குறித்த பாடத் திட்டத்தை ஆய்வு செய்து, உரிய தொழில் நுணுக்க உதவியை வழங்கும்;
  2. பஹ்ரைன் வங்கியியல் மற்றும் நிதிய நிறுவனத்தின் நிதி, வங்கியியல் (BIBF) மாணவர்கள் இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் (ICAI) பட்டயக் கணக்காளர் தேர்வை எழுதுவதற்கு வசதியாக ஐ.சி.ஏ.ஐ. கல்விக்கான பாடத் திட்டத்தைப் பரிந்துரைக்கும். இது ஐ.சி.ஏ.ஐ. நிறுவனத்தில் உறுப்பினராகவும் வழியமைக்கும்;
  3. இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் தொழில் தேர்வை பஹ்ரைன் வங்கியியல் மற்றும் நிதிய நிறுவன மாணவர்கள் எழுதுவதற்கான உதவியையும்  ICAI மேற்கொள்ளும்;

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இந்தியப் பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் உறுப்பினர்கள் தங்களது தொழில் தளத்தை விரிவுபடுத்துவதற்கு வகை செய்யும். அத்துடன் இந்தியப் பட்டயக் கணக்காளர் நிறுவனம் திறனையும் மேம்படுத்தும்.

இதன் நோக்கம், உறுப்பினர்கள், மாணவர்கள், இதர நிறுவனங்களின் சிறந்த நலன் அடிப்படையில் பரஸ்பரம் உறவுகளை மேம்படுத்திக் கொள்வதே ஆகும்.

 

பயன்கள்:

 

பஹ்ரைன் நாட்டில் கணக்கியல் நிறுவனத்துக்கு உள்ளூர் அளவில் தொழில்வல்லுநர்கள் இல்லை. இதனால், இத்துறையில் இந்தியப் பட்டயக் கணக்காளர் நிறுவனத்துடன் கூட்டு வைத்துள்ளது. இது பஹ்ரைன் சந்தையில் பணியாற்றும் இந்தியப் பட்டயக் கணக்காளர்களுக்கும், அத்துடன் பஹ்ரைனுக்குச் செல்ல விரும்பும் பட்டயக் கணக்காளர்களுக்கும் சாதகமான பலனை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.     இந்தியப் பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் நம்பகத் தன்மை மீதும் அதன் திறமை மீதும் பஹ்ரைன் நாடு நம்பிக்கை கொண்டுள்ளது. இதனால், கணக்கியல் மற்றும் கணக்குத் தணிக்கைத் துறைகளில் தனது நாட்டவருக்கு இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் செய்யும் உதவியை பஹ்ரைன் விரும்புகிறது. இது திறமையான பட்டயக் கணக்காளர் தொழில்நிபுணர்களுக்கு நல்ல அடித்தளமாகவும் அமையும்.

 

பின்னணி:

 

இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் (ICAI) இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட “பட்டயக் கணக்காளர் சட்டம், 1949” என்ற சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது. பஹ்ரைன் வங்கியியல் மற்றும் நிதிய நிறுவனம் (BIBF) பஹ்ரைன் நாட்டில் இத்துறையில் பயிற்சி அளிப்பதற்காக 1981ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 

 

*****



(Release ID: 1539186) Visitor Counter : 158