பிரதமர் அலுவலகம்
2018 ஜூலை 14, 15 தேதிகளில் பிரதமர் கிழக்கு உத்திரபிரதேசத்தில் பயணம் மேற்கொள்கிறார்
प्रविष्टि तिथि:
13 JUL 2018 4:26PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி உத்தரபிரதேசத்தில் வாரணாசி, அசாம்கர் மிசாபூர் மாவட்டங்களில் நாளையும். நாளை மறுநாளும் (14 & 15.07.2018) பயணம் மேற்கொள்கிறார்.
அசாம்கரில் நாளை (14.07.2018) பிரதமர் 340 கிலோ மீட்டர் நீளமுள்ள பூர்வாஞ்சல் விரைவுச் சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த விரைவுச் சாலை பாரபங்கி, அமேதி, சுல்தான்பூர், ஃபைசாபாத், அம்பேத்கர் நகர், அசாம்கர், மாவ், காசிபூர் உள்ளிட்ட பல முக்கிய மற்றும் வரலாற்று புகழ் மிக்க நகரங்களை மாநில தலைநகர் லக்னோவுடன் இணைக்கும். இந்த விரைவுச் சாலை பணி நிறைவடையும் போது தில்லி> இந்த விரைவுச் சாலை வழியாக உத்தரபிரதேசத்தில் மேற்கே நொய்டா முதல் கிழக்கே காசிபூர் வரையிலான பெரிய நகரங்கள் மற்றும் பெரு நகரங்களுடன் இணைக்கப்படும்.
வாரணாசியில் பிரதமர் பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்: சில திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். இந்த திட்டங்கள் மொத்தம் ரூ.900 கோடி மதிப்பிலானவை. பிரதமர் அர்ப்பணித்து வைக்கும் திட்டங்களில் வாரணாசி நகர எரிவாயு விநியோக திட்டம், வாரணாசி-பாலியா மின்சார ரயில் திட்டம் ஆகியன அடங்கும். பஞ்ச்கோஷி பரிக்கிரமா மார்க்-ல் அதிநவீன நகரங்கள் இயக்கம் மற்றும் நமாமி கங்கை ஆகியவற்றின் கீழ் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிரதமர் வாரணாசியில் சர்வதேச மாநாட்டு மையத்திற்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
மற்றொரு தனி நிகழ்ச்சியில் பிரதமர் முன்னிலையில் உத்தரபிரதேச முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத் எனது காசி என்று பொருள்படும் “மேரி காசி” என்ற நூலை வெளியிடுகிறார்.
நாளை (15.07.2018) பிரதமர் மிர்சாபூருக்கு செல்கிறார். அங்கு பன்சாகர் வாய்க்கால் திட்டத்தை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். இந்தத் திட்டம் இந்த மண்டலத்தின் பாசன வசதியை பெரிய அளவில் மேம்படுத்தும். மிர்சாபூர், அலகாபாத் மாவட்ட விவசாயிகளுக்கு இத்திட்டம் பெரிதும் பயனுள்ளதாக அமையும்.
இதே நிகழ்ச்சியில் திரு. நரேந்திர மோடி மிர்சாபூர் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த மாநிலத்தில் 108 ஜன் அவ்ஷதி மையங்களை பிரதமர் திறந்து வைக்கிறார். மிர்சாபூருக்கும். வாரணாசிக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தி கங்கை ஆற்றின் மீது, சுனார் பகுதியில் பாலுகாட் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள, பாலம் ஒன்றையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்.
(रिलीज़ आईडी: 1538623)
आगंतुक पटल : 167