மத்திய அமைச்சரவை

மண்டல ஊரக வங்கிகளின் மறு முதலீட்டுத் திட்டத்தை 2019 - 20 வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 04 JUL 2018 2:29PM by PIB Chennai

  பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மண்டல  ஊரக வங்கிகளின் மறு முதலீட்டுத் திட்டத்தை, மேலும் மூன்று ஆண்டுகளுக்கு, அதாவது,  2019 - 20 வரை   நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் மண்டல கிராமிய வங்கிகள், இடர்பாடு மதிப்பீட்டுடன்கூடிய கையிருப்பு வீதத்தை  குறைந்தபட்ச முதலீட்டை ஒன்பது சதவீத அளவுக்கு பராமரிக்க வகைசெய்யப்பட்டுள்ளது. 

விளைவுகள்:

   வலுவான முதலீட்டு கட்டமைப்பும், இடர்பாடு மதிப்பீட்டுடன் கூடிய குறைந்தபட்ச முதலீட்டு கையிருப்பு விகிதத்தை தேவையான அளவுக்கு பராமரிப்பதன் மூலம், மண்டல ஊரக வங்கிகளின் நிதி நிலைத்தன்மை உறுதி செய்யப்படுவதோடு, கிராமப் பகுதிகளின் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், உள்ளார்ந்த நிதி சேவையிலும், முக்கியப் பங்கு வகிக்க முடியும்.

விவரம்:

  நாட்டில் தற்போது 56 மண்டல ஊரக வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. 31 மார்ச் 2017 நிலவரப்படி(உத்தேசமாக), மண்டல கிராமிய வங்கிகள் ரூ.2,28,599 கோடி அளவுக்கு கடன் வழங்கியுள்ளன. இதில் முக்கியப் பிரிவுகளில் வழங்கப்பட்ட கடன் விவரம் வருமாறு: 

விவரம்

கடன் தொகை (ரூ.கோடியில்)

மொத்த கடன்

%

மொத்த முன்னுரிமைப் பிரிவு கடன் (பிஎஸ்எல்)

2,05,122

 

89.73%

 

வேளாண்மை (பிஎஸ்எல்-ன்கீழ்)

1,54,322

67.51%

சிறு&குறு விவசாயிகள் (வேளாண் ஒதுக்கீடு)

 

1,02,791

 

44.97%

 

 

(ஆதாரம்: நபார்டு)

  மண்டல ஊரக வங்கிகளில் மறு முதலீடு செய்யும் திட்டம் 2010 -11 நிதியாண்டில் தொடங்கப்பட்டு, 2012-13 மற்றும் 2015-16ஆம் ஆண்டுகளில்  இருமுறை நீட்டிக்கப்பட்டது. கடைசியாக, 31.03.2017வரை நீட்டிக்கப்பட்டது. மத்திய அரசின் பங்கான ரூ.1,450 கோடியில் 31 மார்ச் 2017 வரை,  மொத்தம் ரூ.1107.20 கோடி, மண்டல கிராமிய வங்கிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய ரூ.342.80 கோடி, இடர்பாடு மதிப்பீட்டுடன் கூடிய குறைந்தபட்ச முதலீட்டு கையிருப்பு வீதம் ஒன்பது சதவீதத்திற்கும் குறைவாக உள்ள மண்டல கிராமிய வங்கிகளின் மறுமுதலீட்டு ஆதரவுக்காக, 2017-18, 2018-19 மற்றும் 2019-20ஆம் ஆண்டுகளில் வழங்கப்படும்.

  மறு முதலீடு தேவைப்படும் மண்டல ஊரக வங்கிகளை அடையாளம் காண்பதும், எவ்வளவு முதலீட்டுத் தொகை வழங்கவேண்டும் என்பதும், நபார்டு வங்கியுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும்.

  2018-19ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையில், நிதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு தவிர, வலுவான நிதி கட்டமைப்பை கொண்டுள்ள மண்டல ஊரக வங்கிகள், மத்திய அரசு, மாநில அரசு மற்றும் ஆதரவு வங்கி அல்லாத, வகைகளில் முதலீடு திரட்ட அனுமதிக்கப்படும்.

பின்னணி:

  கிராமப்புறங்களை சேர்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் சிறுதொழில் முனைவோர், விவசாயம், வர்த்தகம், வணிகம், தொழில் மற்றும் உற்பத்தி சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான கடன் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தரும் நோக்குடன், மண்டல ஊரக வங்கிகள் ஏற்படுத்தப்பட்டன. மண்டல ஊரக வங்கிகள் மத்திய அரசு, மாநில அரசு மற்றும் சம்பந்தப்பட்ட ஆதரவு வங்கியின் முறையே 50%, 15% மற்றும் 35% என்ற விகிதாச்சார முதலீட்டில் நடத்தப்படுகின்றன.

==============



(Release ID: 1537615) Visitor Counter : 168