மத்திய அமைச்சரவை
மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத் திருத்த மசோதா 2013ஐ விலக்கிக்கொள்ளும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
प्रविष्टि तिथि:
13 JUN 2018 6:11PM by PIB Chennai
மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத் திருத்த மசோதா 2013ஐ விலக்கிக்கொள்ளும் திட்டத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
2009ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தாய்லாந்தில் நடைபெற்ற 4 வது கிழக்காசிய உச்சிமாநாட்டின்போது, வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையின் அடிப்படையில் நாளந்தா பல்கலைக்கழகம் உருவக்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தை அரசு சாராத, லாப நோக்கமற்ற, சமயசார்பற்ற, சுயாட்சி உரிமையுள்ள சர்வதேச நிறுவனமாக உருவாக்கப்படுவதை உச்சிமாநாடு ஆதரித்தது. இதனையடுத்து, 2010 நாளந்தா பல்கலைக்கழகச் சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டு, 2010 நவம்வர் 25ம் தேதி அமலுக்கு வந்தது.
2013 ஆகஸ்ட் 26ம் தேதி மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நாளந்தா பல்கலைக்கழக திருத்த மசோதா 2013 ஐ விலக்கிக் கொள்வதை நோக்கமாக கொண்டது இப்போதைய திட்டம். இந்தச் சட்டத்தில் சில பிரிவுகளை திருத்தி அமைத்து புதிய அம்சங்களை சேர்ப்பதற்கானது இந்த மசோதா.
2010 நாளந்தா பல்கலைக்கழகச் சட்டம் பிரிவு 7 ன்படி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலின்பேரில், நாளந்தா பல்கலைக்கழகத்தின் ஆளுகை வாரியம் அமைக்கப்பட்டு, 21.11.2016 அன்று அமலுக்கு வந்தது. இந்த திருத்த மசோதா இந்த பல்கலைக்கழகத்தின் தற்போதைய ஆளுகை வாரியத்தின் விவாதத்திற்கு வரவேண்டியது அவசியம் என்பதால், இது விலக்கிக்கொள்ளப்படுகிறது. மேலும் தற்போதைய ஆளுகை வாரியம் 2010 நாளந்தா பல்கலைக்கழக சட்டத்தை முழுமையாக ஆராய விரும்பும் என்பதாலும், தேவைப்படும் திருத்தங்கள், சேர்க்கைகளை பரிந்துரைச் செய்யக்கூடும் இந்த நடவடிக்கை.
2014 செப்டம்பர் மாதம் இந்த பல்கலைக்கழக கற்பிப்புப் பணிகளை வெளியுறவு அமைச்சர் திருமதி. சுஷ்மா சுவராஜ் தொடங்கி வைத்தார். குடியரசுத் தலைவர் இந்த பல்கலைக்கழகத்தின் விசிட்டர் ஆவார். டாக்டர். விஜய் பத்கர், வேந்தராகவும், பேராசிரியர் சுனைனா சிங் துணைவேந்தராகவும் உள்ளனர். இப்பல்கலைக்கழகத்தில் தற்போது 116 மாணவர்கள் பயில்கின்றனர். வரலாற்று ஆய்வுப் பள்ளி, சுற்றுச்சூழலியல் பள்ளி, புத்த சமய ஆய்வுப் பள்ளி ஆகிய 3 பிரிவுகளில் இந்த மாணவர்கள் சேர்ந்து பயின்று வருகிறார்கள். இவர்களில் 21 வெளிநாடுகளை சேர்ந்த 35 மாணவர்களும் உள்ளனர்.
============
(रिलीज़ आईडी: 1535379)
आगंतुक पटल : 561