மத்திய அமைச்சரவை

வெளிகளுக்கான திட்டமிடல், நீர் நிர்வாகம், போக்குவரத்து நிர்வாகம் ஆகிய துறைகளின் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கென இந்தியாவுக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்த விரிவாக்கத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 06 JUN 2018 3:29PM by PIB Chennai

விண்வெளி திட்டங்கள், நீர் நிர்வாகம், போக்குவரத்து நிர்வாகம் ஆகிய துறைகளின் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கென இந்தியாவுக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையிடம் விளக்கம் அளிக்கப்பட்டது.

விவரங்கள் :

 விண்வெளி திட்டங்கள், நீர் நிர்வாகம், , சமத்துவ அடிப்படையிலான  போக்குவரத்து நிர்வாகம், குறைந்த விலை வீட்டுவசதி, அதிநவீன நகர மேம்பாடு, குடிநீர் வழங்குதல் மற்றும் கழிவுநீர் அமைப்பு ஆகியவற்றுக்கான  புவியியல் தகவல் அமைப்பு, கழிவுநீர் மறு சுழற்சி, நீர் நிலைகளை செயற்கை முறையில் நிரப்பி நீர்நிலையங்களை பாதுகாத்தல், ஒருங்கிணைந்த திடக் கழிவு மேம்பாடு, பாரம்பரிய இடங்கள் பாதுகாப்பு,   ஆகிய துறைகளில் கையெழுத்திட்ட தரப்பினருக்கு இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம்  நோக்கமாகக் கொண்டது.

அமலாக்க அணுகுமுறை :

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ்  இந்தியா – நெதர்லாந்து கூட்டுப்பணிக்குழு அமைக்கப்படும். புரிந்துணர்வு கட்டமைப்பின்படி ஒத்துழைப்பு திட்டங்களை உருவாக்கி அமல்படுத்துவதற்கு இந்தக் குழு உதவும். இந்தக் கூட்டுப்பணிக்குழு ஆண்டுக்கு ஒருமுறை இங்கிலாந்திலும் நெதர்லாந்திலும் மாறி மாறி கூடி விவாதித்து செயல்படும்.

முக்கிய தாக்கம் :

விண்வெளி திட்டங்கள், நீர் மேலாண்மை, இருநாடுகளுக்கும் இடையிலான போக்குவரத்து மேலாண்மை ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேம்படுத்தும்.

பயனாளிகள்:

விண்வெளி திட்டங்கள், நீர் மேலாண்மை, போக்குவரத்து மேலாண்மை, அதிநவீன நகரங்கள் மேம்பாடு, குறைந்தவிலை வீட்டுவசதி, கழிவு மேலாண்மை, நகர்ப்புறச் சுற்றுச்சூழல் மற்றும் பாரம்பரிய இடங்கள் பாதுகாப்பு ஆகிய துறைகளில் வேலைவாய்ப்பை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

                                     -----



(Release ID: 1534626) Visitor Counter : 137