மத்திய அமைச்சரவை

புகையிலை பொருட்களின் சட்டவிரோதமான விற்பனையை கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பின் செயல்முறையை ஏற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 02 MAY 2018 3:30PM by PIB Chennai

புகையிலைப் பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதை கட்டுப்படுத்த புகையிலைக் கட்டுப்பாடு குறித்த உலக சுகாதார அமைப்பின் நெறிமுறைகளை ஏற்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்தது. இது உலக சுகாதார அமைப்பின் புகையிலைக்கு எதிரான கட்டமைப்பின் விதி 15ன் கீழ் குறிப்பிடப்பட்டிருப்பது போல புகைபிடித்தல் மற்றும் மெல்லுதல் அல்லது புகையில்லா புகையிலை ஆகிய இரண்டுக்கும் பொருந்தும். உலக சுகாதார அமைப்பின் புகையிலைக்கு எதிரான கட்டுப்பாட்டு அமைப்பில் இந்தியா ஓர் அங்கமாகும்.

விவரங்கள்:

இந்த நெறிமுறைகள் சம்பந்தப்பட்டவர்களின் கடமைகளை எடுத்துக்கூறுகிறது. இது சம்பந்தப்பட்டவர்களான புகையிலை பொருட்கள் தயாரிப்புக்கான உரிமை பெற்றவர்கள் மற்றும் புகையிலை பொருட்கள் தயாரிப்புக்கான இயந்திரங்களின் உற்பத்தியில் ஈடுபட்டிருப்பவர்கள்  மீது உரிய கண்காணிப்பு, கண்டுபிடித்தல், ஆவணங்கள் பராமரிப்பு, பாதுகாப்பு, இ-வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்போர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தடையற்ற வர்த்தக மண்டலத்தில் உற்பத்தி மற்றும் தீர்வையில்லா விற்பனை என பின்பற்றப்பட வேண்டிய விநியோகச் சங்கிலி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்த நெறிமுறையில் குற்றங்கள், அமலாக்க நடவடிக்கைகளான பறிமுதல் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை அழித்தல் ஆகியவற்றைப் பட்டியலிடுகிறது. தகவல் பரிமாற்றம், ரகசியம் காத்தல், பயிற்சி, தொழில்நுட்ப உதவி மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்ப விவகாரங்களில் ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு இது அழைப்பு விடுக்கிறது.

 

தாக்கம்:

 

சட்ட விரோதமான புகையிலை வர்த்தகம் முற்றிலும் ஒழிக்கப்படும்போது,  முழுமையான புகையிலைக் கட்டுப்பாடு வலுப்பெறுவது அதன் காரணமாக புகையிலைப் பயன்பாடு குறைவது, அதனால் புகையிலை காரணமாக ஏற்படும் நோய்ச் சுமை மற்றும் அதனுடன் தொடர்புடைய மரணம் குறையும்.

இத்தகைய ஒப்பந்தம் ஏற்கப்படுவதால் நடைமுறையில் உள்ள பழக்கங்களுக்கு எதிரான மாற்றத்தை அளித்து பொது சுகாதாரம் பாதிக்கப்படாமல் தடுக்கப்படும். புகையிலைக் கட்டுப்பாட்டில் முன்னணியில் உள்ள இந்தியா உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களின் மீது சட்டவிரோத புகையிலை வர்த்தகத்திற்கு எதிரான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

 

புகையிலை சட்டவிரோத வர்த்தகத்தை நீக்கும் செயல்முறை புகையிலைக்கு எதிரான சர்வதேச நடவடிக்கையை பலப்படுத்துவதுடன் பொது சுகாதாரத்தில் ஒரு புதிய சட்டரீதியான நடவடிக்கையாக இருக்கும். புகையிலை பொருட்கள் சட்ட விரோத வர்த்தகத்தை கட்டுப்படுத்தி அதன் மூலம் அவற்றை ஒழிப்பதில் இது ஒரு முழுமையான கருவியாக இருக்கும். சர்வதேச சுகாதார ஒத்துழைப்புக்கு சட்ட அளவீடுகளை இது பலப்படுத்தும்.

 

பின்னணி:

 

புகையிலைக் கட்டுபாட்டுக்கான உலக சுகாதார அமைப்பின் செயல்முறையானது உலக சுகாதார அமைப்பின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ள முதலாவது சர்வதேச பொது சுகாதார உடன்படிக்கையாகும். புகையிலைத் தேவை மற்றும் விநியோகத்தை பிராந்திய, தேசிய மற்றும் சர்வதேச அளவில் குறைப்பது,  இந்த கூட்டமைப்பின் நோக்கமாகும்.

 

புகையிலை விநியோக குறைப்பு யுக்தி இந்த செயல்முறையின் விதி 15ல் கூறப்பட்டுள்ளதில் முக்கியமானது அனைத்து வடிவத்தில் உள்ள புகையிலை பொருட்களையும் ஒழிக்க வகை செய்கிறது.  இதில் சட்டவிரோத உற்பத்தி, கடத்தல் ஆகியவை அடங்கும். அதன்படி இந்த செயல்முறை உருவாக்கப்பட்டு சம்பந்தபட்டவர்களின் மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த செயல்முறை 10 பகுதிகள் மற்றும் 47 விதிகளைக் கொண்டுள்ளது.

***** 



(Release ID: 1531086) Visitor Counter : 192