• Skip to Content
  • Sitemap
  • Advance Search
சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

எனது மண், எனது தேசம் இயக்கத்தின் கீழ் வட்டார அளவிலான கலச யாத்திரைகள் மாநிலம் முழுவதும் தொடங்கின

Posted On: 12 OCT 2023 5:46PM by PIB Chennai

விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் நிறைவாக நாடு தழுவிய எனது மண், எனது தேசம் என்ற இயக்கம்  தற்போது அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளது,  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் அனைத்து வட்டாரங்களிலும், நேரு இளைஞர் மையம் வட்டார அளவிலான கலச யாத்திரைகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. கிராம அளவிலான கலச யாத்திரைகளின் போது, கிராமங்களில் இருந்து சேகரிக்கப்படும் மண், வட்டார அளவிலான நிகழ்ச்சிகளுக்குக் கொண்டு வரப்பட்டு, வட்டாரத் தலைமையிடங்களில் நடைபெறும் விழாக்களில் பெரிய கலசத்தில் சேகரிக்கப்படும்.

இந்திய அஞ்சல் துறை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை, முன்னணி வங்கிகள், பொதுச் சேவை மையங்கள், நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, சாரணர் மற்றும் சாரணியர் இயக்கம், உள்ளாட்சி அமைப்புகள், சமூக அடிப்படையிலான அமைப்புகள் போன்றவற்றின் ஒருங்கிணைப்புடன் மொத்தம் 364 வட்டார அளவிலான கலச யாத்திரைகளை நேரு இளைஞர் மையம் ஏற்பாடு செய்துள்ளது. வட்டார அளவிலான நிகழ்ச்சிகளின் போது, ஐந்து உறுதிமொழியும் எடுத்துக்கொள்ளப்படும்.

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய மக்கள் தொடர்பகம்,   தஞ்சாவூர் தென்மண்டல கலாச்சார மையம் ஆகியவை வட்டார அளவிலான கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் அனைத்து வட்டாரங்களிலிருந்தும் வட்டார அளவிலான கலசங்கள் மாநிலத் தலைநகருக்கும், பின்னர் தேசியத் தலைநகர் புதுதில்லிக்கும் கொண்டு செல்லப்படும், அங்கு இந்த மாத இறுதியில் எனது மண், எனது தேசம் இயக்கத்தின் நிறைவு நிகழ்வு நடைபெறும்.

 

சென்னை மாவட்டத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படை,  சென்னை ஊரகப்பகுதி, நேரு இளைஞர் மையம் ஆகியவை இணைந்து, கேந்திரிய வித்யாலயா தீவுத் திடலில், வட்டார அளவிலான கலச யாத்திரைக்கு ஏற்பாடு செய்திருந்தது.  திரைப்பட நடிகரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.வி.சேகர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட கலசங்களைப் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் சிஐஎஸ்எஃப் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஹர்பீத் கௌர், நேரு இளைஞர் மையத்தின் மாநில இயக்குநர் கே.குன்ஹமது, பாரத ஸ்டேட் வங்கியின் தலைமைப் பாதுகாப்பு மேலாளர் சரிகா வான், பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை மேலாளர் என்.வி.ராதாகிருஷ்ணன், கேந்திரிய வித்யாலயா முதல்வர் கிருஷ்ணசாமி, சிஐஎஸ்எஃப் கமாண்டன்ட் கார்த்திகேயன், உதவி கமாண்டன்ட் ஷேக் ஜப்பார், நேரு இளைஞர் மையத்தின் துணை இயக்குநர் ஜே.சம்பத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்கால் மாவட்டத்தில், நேரு இளைஞர் மையம், வட்டார வளர்ச்சி அலுவலகம், பொது சேவை மையம் ஆகியவை இணைந்து வட்டார அளவிலான கலச யாத்திரையை நடத்தின. நேரு இளைஞர் மையத்தின் மாவட்ட இளைஞர் அலுவலர் உ.மணிமாறன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருணகிரிநாதன், இணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.ரங்கநாதன்,  பொதுச் சேவை மையத்தின் மேலாளர் எஸ். பாவேந்தன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

கிருஷ்ணகிரி மாவட்டத்திலும், வட்டார அளவிலான கலச யாத்திரை நடைபெற்றது. வேலூர் மாவட்டம் அரக்கோணம் வட்டாரத்தில் நேரு இளைஞர் மையம்  சார்பில் நடைபெற்ற கலச யாத்திரையில், இளைஞர் மையத்தின் மாவட்ட இளைஞர் அலுவலர் பிரேம் பரத்குமார், அஞ்சல் துறை உதவி கண்காணிப்பாளர் முருகேஸ்வரி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதல்வர் பூபாலன், கலாச்சார அமைச்சகத்தின் பிரதிநிதி சுரேஷ் ஆகியோர் பங்கேற்றனர். வட்டாரத்தின் பல்வேறு கிராமங்களில் சேகரிக்கப்பட்ட மண், அஞ்சல் துறை அதிகாரிகளால் நேரு இளைஞர் மையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

    

 

    

***

ANU/SMB/PKV/AG/GK



(Release ID: 1967152) Visitor Counter : 143

Read this release in: English

Link mygov.in