57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

வில்லன் என்பவர் ஒரு தனிநபர் அல்ல, சமூகத்தின் பிரதிபலிப்பு: ஐஎஃப்எஃப்ஐ-ல் திரைப்பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்

இடுகை இடப்பட்ட நாள்: 27 NOV 2026 7:11PMby PIB Chennaiவெளியீட்டு அடையாள எண்: 2342896Views: 5

கோவாவில் நடைபெறும் 57-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் (ஐஎஃப்எஃப்ஐ), “வில்லன் கதாபாத்திரம் சரியாக இருந்தால் என்னவாகும்?” என்ற தலைப்பிலான கலந்துரையாடலில், புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பங்கேற்றார். அறநெறியின் சிக்கல்கள், தீய குணங்கள் உருவாவதற்கான சமூக வேர்கள், பாரபட்சங்களுக்கு எதிராகச் சவால் விடுப்பதில் திரைப்படத்தின் ஆற்றல் குறித்து அவர் விரிவாகப் பேசினார். திரைப்பட விமர்சகர் சுதிர் சீனிவாசன் நெறியாளராகபி பங்கேற்ற இந்தக் கலந்துரையாடலில், கார்த்திக் சுப்பராஜின் திரைப்படங்கள் நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான வழக்கமான வேறுபாடுகளை எவ்வாறு கேள்விக்குள்ளாக்குகின்றன என்பது குறித்து ஆராயப்பட்டது.

தனது 'டோரதி' திரைப்படம் குறித்து விளக்கமளித்த சுப்பராஜ், தெரிந்தே தீய செயல்களைச் செய்யும் கதாபாத்திரங்களுக்கும், ஆழமாக வேரூன்றிய சமூகப் பழக்கவழக்கங்களால் தீங்கு விளைவிக்கும் நடத்தைகளைக் கொண்ட கதாபாத்திரங்களுக்கும் இடையே வேறுபடுத்திக் காட்டினார்.

ஒருவரின் இயலாமையைக் கண்டு ஏளனம் செய்வதும் சிரிப்பதும், அவரைத் திட்டுவதை விட அதிக மனவலியை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார். குற்ற உணர்ச்சியும் மனவருத்தமும் ஒரு வகையான தண்டனைகள்தான் என்று கூறிய அவர்,  ஒருவரின் செயல்களுக்கான விளைவுகள் எப்போதும் உடல் ரீதியான பாதிப்பாகவோ, மரணமாகவோதான் இருக்க வேண்டும் என்பதில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2342744&reg=3&lang=1

****

SK/BR/SH


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2342896
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026