57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

ஸ்மார்ட் போர்டுகளால் மாறும் கல்விச் சூழல்: ஆசிரியர்களின் உணர்வுகளைப் பேசும் ‘கபீர் சர் கா அக்ரி லெசன்’

இடுகை இடப்பட்ட நாள்: 27 NOV 2026 3:17PMby PIB Chennaiவெளியீட்டு அடையாள எண்: 2342765Views: 8

கோவாவில் நடைபெறும் 57-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘கபீர் சர் கா அக்ரி லெசன்’ என்ற இந்தித் திரைப்படம் உலக அளவில் முதன்முறையாகத் திரையிடப்பட்டது. இயக்குநர் சர்ஃபராஸ் ஆலம் இயக்கிய முதல் முழுநீளத் திரைப்படம் இது.

பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் உள்ள தனது பள்ளிக்குச் சென்றபோது ஏற்பட்ட அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கியதாக இயக்குநர் தெரிவித்தார். கரும்பலகைகளுக்குப் பதிலாக ஸ்மார்ட் போர்டுகள் வந்துள்ள நிலையில், புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மாறுவதில் அனுபவமிக்க ஆசிரியர்கள் சிரமப்படுவதைப் பார்த்ததாக அவர் கூறினார்.

தலைமுறைகளை உருவாக்கிய ஆசிரியர்கள் இன்று தொழில்நுட்ப மாற்றங்களையும், ஆசிரியர் பணியின் மீதான மாறிவரும் அணுகுமுறைகளையும் எதிர்கொள்வதாக அவர் குறிப்பிட்டார். ஆசிரியர், மாணவர், பெற்றோர் இடையேயான நெருக்கமான உறவு குறைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ரஷ்யாவில் மருத்துவம் பயின்ற பின்னர் நியூயார்க் திரைப்படக் கல்லூரியில் திரைப்படக் கலையைக் கற்ற சர்ஃபராஸ் ஆலம், தனது ஆசிரியர்களின் தாக்கம், தன்னிடம் இன்றும் தொடர்வதாகக் கூறினார். கார்டினா என்டர்டெயின்மென்ட் அண்ட் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரித்துள்ள இப்படத்தில் வினய் பதக் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் கால அளவு 103.52 நிமிடங்கள்.

இளைஞர்கள் பிறரைப் பற்றித் தவறாகப் பேசுவதைத் தவிர்த்து, கவனமாகக் கேட்கவும், சிந்திக்கவும் வேண்டும் என இயக்குநர் வலியுறுத்தினார். பீகாரின் வளர்ச்சியைப் பரவலாக எடுத்துச் செல்வதில் திரைப்படங்களுக்குப் பங்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மரியாதை ஆகியவற்றை உணர்வுபூர்வமாக எடுத்துரைக்கும் இப்படம், எல்லைகளைக் கடந்த மனித உறவுகளைப் பேசுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2342508=3&lang=1

****

SS/PLM/SH


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2342765
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026