எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாநில மின்துறை அமைச்சர்கள் மாநாடு தொடக்கம்: மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் தலைமை வகித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 27 NOV 2026 12:40PM by PIB Chennai

மத்திய மின்துறை, வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு மனோகர் லால் தலைமையில் மாநில மின்துறை அமைச்சர்கள் மாநாடு புதுதில்லியில் இன்று (2026 நவம்பர் 27) தொடங்கியது. 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மின்துறை அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், மின்சார ஒழுங்குமுறை ஆணையர்கள் பங்கேற்கும் இந்த மாநாடு இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

மாநாட்டில் உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு மனோகர் லால், அடுத்த 20 ஆண்டுகளில் நாட்டின் மின்துறையில் ரூ.200 லட்சம் கோடி முதலீட்டுக்கான வாய்ப்புகள் உள்ளதாகவும், இதனை சிறந்த முறையில் பயன்படுத்த அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார். மின் உற்பத்தி, சேமிப்பு, பரிமாற்றம், விநியோகம் ஆகிய நடவடிக்கைகளை ஒருங்கிணைந்த அமைப்பாகத் திட்டமிட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், மாநிலங்கள் ஸ்மார்ட் மீட்டர்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சியால் 2024-25 நிதியாண்டில் மின் விநியோக நிறுவனங்கள் லாபம் ஈட்டியுள்ளதற்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

மத்திய மின்துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபத் யெஸ்ஸோ நாயக், மின்துறை செயலாளர் திரு பங்கஜ் அகர்வால் உள்ளிட்டோர் பங்கேற்ற இம்மாநாட்டில், 2047-ம் ஆண்டில் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி நாடு பயணித்து வரும் இவ்வேளையில், எரிசக்தி தற்சார்பை எட்டுவது குறித்தும், மாற்றியமைக்கப்பட்ட மின் விநியோகத் திட்டம் ஆகியவை குறித்தும் விரிவாக விவாதிக்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2342431&reg=3&lang=1

***

SS/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2342733) வருகையாளர் எண்ணிக்கை : 17
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Kannada