நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பீகாரின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் பீகார் காவல்துறையுடன் இணைந்து வருவாய் புலனாய்வு இயக்குநரகம் நடத்திய அதிரடி சோதனையில் 19 கிலோவிற்கும் அதிகமான யானைத் தந்தங்கள் பறிமுதல்; நான்கு பேர் கைது

இடுகை இடப்பட்ட நாள்: 26 NOV 2026 1:19PM by PIB Chennai

சட்டவிரோத வனவிலங்கு கடத்தலுக்கு எதிரான முக்கிய நடவடிக்கையாக, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் மற்றும் பீகார் மாநிலக் காவல்துறை இணைந்து இந்தியா–நேபாள எல்லையையொட்டிய மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் நடத்திய கூட்டு நடவடிக்கையில் 19.39 கிலோ எடையுள்ள யானைத் தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இதில் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரகசியத் தகவலின் அடிப்படையில், இரண்டு இருசக்கர வாகனங்களில் சென்ற நான்கு பேரை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர். அவர்கள் தப்பியோட முயன்றபோதிலும் வெற்றிகரமாகக் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்த பையிலிருந்து வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972-ன் கீழ் யானைத் தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972-ன் அட்டவணை I மற்றும் அழிந்துவரும் வன விலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகத்திற்கான உடன்படிக்கையின் இணைப்பு I ஆகியவற்றின் கீழ் யானைகள் பாதுகாக்கப்படுகின்றன; இந்தியச் சட்டப்படி யானைத் தந்த வர்த்தகம் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341791&reg=3&lang=1

***

SK/NB/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2342678) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Assamese , Telugu