இடுகை இடப்பட்ட நாள்:
26 NOV 2026 7:06PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, 2026 நவம்பர் 27 முதல் டிசம்பர் 2 வரை கேரளம், மிசோரம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
நவம்பர் 27 அன்று, கேரள மாநிலம், வடக்கும்பாகம், காலடி, தலையாட்டும்பிள்ளியில் உள்ள ஆதிசங்கரரின் பிறந்த இடத்தை குடியரசுத் தலைவர் பார்வையிட உள்ளார். அதே நாளில், கேரள மாநிலம், திருச்சூரில் உள்ள வைத்யரத்னம் ஆயுர்வேதக் கல்லூரியின் பொன்விழாக் கொண்டாட்டங்களின் நிறைவு நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்க உள்ளார்.
நவம்பர் 28 அன்று, கேரள மாநிலம், எழிமலையில் உள்ள இந்தியக் கடற்படை அகாடமியில் நடைபெறவுள்ள பயிற்சிப் பருவ நிறைவு அணிவகுப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்க உள்ளார்.
நவம்பர் 29 அன்று, மிசோரம் மாநிலம், கெல்சிஹ் பகுதியில் உள்ள ரோபுய்லியானி பழங்குடியின விடுதலைப் போராட்ட வீரர்கள் அருங்காட்சியகத்தை குடியரசுத் தலைவர் பார்வையிட உள்ளார்.
நவம்பர் 30 அன்று, ஐஸ்வாலில் உள்ள மிசோரம் பல்கலைக்கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழாவிலும், அப்பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழாக் கொண்டாட்டங்களின் நிறைவு நிகழ்ச்சியிலும் குடியரசுத் தலைவர் பங்கேற்க உள்ளார்.
டிசம்பர் 1 அன்று, நாகாலாந்து மாநிலம், கிசாமாவில் நடைபெறவுள்ள 27-வது ஹார்ன்பில் திருவிழாவின் தொடக்க விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்க உள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2342175®=3&lang=1
(Release ID : 2342175)
****
SK/PLM/SH