இடுகை இடப்பட்ட நாள்:
26 NOV 2026 2:31PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, தலைசிறந்த பேட்மிண்டன் வீராங்கனையான பி வி சிந்துவின் கட்டுரையை இன்று பகிர்ந்துள்ளார். ஒலிம்பிக் கனவு, இந்தியா முழுவதிலும் உள்ள பெண்களுக்கு எவ்வாறு புதிய வாப்புகளை உருவாக்கக்கூடும் என்பதை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.
2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா கொண்டுள்ள லட்சியமானது, விளையாட்டுகளில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கவும், அடிப்படை உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், நிதிச் சுதந்திரத்திற்கான வழிவகைகளை உருவாக்கவும் எவ்வாறு உதவும் என்பதை பி வி சிந்து தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். விளையாட்டுத் துறையில் பெண்கள் சாதனை படைக்க ஊக்குவிக்கும் திட்டமான அஸ்மிதா போன்ற முன்னெடுப்புகளையும், விளையாட்டு சாதனைகள் எவ்வாறு அடுத்த தலைமுறை வீராங்கனைகளுக்கு ஊக்கம் அளிக்கின்றன என்பது குறித்தும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
ஒலிம்பிக் கனவு, இந்தியா முழுவதிலும் உள்ள பெண்களுக்கு புதிய வாப்புகளை உருவாக்கக்கூடும்.
தலைசிறந்த பேட்மிண்டன் வீராங்கனையான பி வி சிந்து, 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா கொண்டுள்ள லட்சியமானது, விளையாட்டுகளில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கவும், அடிப்படை உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், நிதிச் சுதந்திரத்திற்கான வழிவகைகளையும் உருவாக்கும் எவ்வாறு உதவும் என்பது குறித்து எழுதியுள்ளார்.
அஸ்மிதா போன்ற முன்னெடுப்புகளையும், விளையாட்டு சாதனைகள் எவ்வாறு அடுத்த தலைமுறை வீராங்கனைகளுக்கு ஊக்கம் அளிக்கின்றன என்பது குறித்தும் அவர் எடுத்துரைத்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341846®=3&lang=1&_gl=1
***
SS/LN/SH