இடுகை இடப்பட்ட நாள்:
26 NOV 2026 2:28PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சமூக நீதி, வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான வழிகாட்டியாக அரசியலமைப்பு எவ்வாறு திகழ்கிறது என்பதை எடுத்துரைக்கும் மத்திய இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால் எழுதிய கட்டுரையைப் பகிர்ந்துள்ளார்.
பாபாசாஹேப் அம்பேத்கரின் இந்தியாவுக்கான தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதை நோக்கி செயல்படுத்தப்படும், நலத்திட்டங்களையும் வரலாற்றுச் சிறப்புமிக்க அரசியலமைப்பு விதிகளையும் திரு மேக்வால் எடுத்துரைத்துள்ளார். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினர், பெண்களுக்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தியதோடு, நாட்டைக் கட்டமைப்பதில் அரசியலமைப்பு மாண்புகளின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக, சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“சமூக நீதி, வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான வழிகாட்டியாக அரசியலமைப்பு திகழ்கிறது.
பாபாசாஹேப் அம்பேத்கரின் இந்தியாவுக்கான தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதை நோக்கி செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களையும், வரலாற்றுச் சிறப்புமிக்க அரசியலமைப்பு விதிகளையும் மத்திய இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால் எழுதியுள்ளார்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினர், பெண்களுக்கான நடவடிக்கைகளை அவர் முன்னிலைப்படுத்தியுள்ளார். தேசத்தைக் கட்டமைப்பதில் அரசியலமைப்பு மாண்புகளின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341841®=3&lang=1&_gl=1
***
SS/LN/PS