கோவாவில் நடைபெறும் 57-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவின் இந்தியன் பனோரமா பிரிவில் இடம்பெற்றுள்ள ‘பாப்யா’ மராத்தித் திரைப்படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான திரு சமீர் திவாரி, நடிகர் திரு கிரிஷ் குல்கர்னி ஆகியோர் பத்திரிகை தகவல் அலுவலகம் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர். பாலின அடையாளம், குடும்ப உறவுகள், சமூகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இப்படம், எவருக்கும் அறிவுரை கூறாமல் தனிமனித விருப்பங்களையும் புரிதலையும் எதார்த்தமாகப் பதிவு செய்வதாக திரு சமீர் திவாரி தெரிவித்தார். சவாலான முதன்மைக் கதாபாத்திரத்தைத் துணிச்சலுடன் ஏற்று நடித்த நடிகை ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டேவை அவர் பாராட்டினார்.
நடிகர் திரு கிரிஷ் குல்கர்னி பேசுகையில், கலை என்பது சமூகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக மட்டுமின்றி, சமூக முன்னேற்றத்திற்கான வழிகாட்டியாகவும் திகழ்வதாகக் குறிப்பிட்டார். பாரம்பரியங்களை விட்டுக்கொடுக்காமல், மாறிவரும் காலத்திற்கு ஏற்ப அவற்றைப் புதிய கோணத்தில் ‘பாப்யா’ அணுகுவதாகவும், ஒவ்வொருவரையும் கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341149®=3&lang=1
****
SK/SE/SH