57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

கோவாவில் நடைபெறும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் இளம் படைப்பாளிகளுக்கு பாராட்டு

இடுகை இடப்பட்ட நாள்: 25 NOV 2026 1:57PMby PIB Chennaiவெளியீட்டு அடையாள எண்: 2341476Views: 4

கோவாவில் நடைபெறும் 57-வது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில், “நாளைக்கான படைப்பாற்றல் சிந்தனையாளர்கள்” என்ற தலைப்பில் நடைபெற்ற திரைப்பட தயாரிப்பு போட்டியின் 6-வது பதிப்பு நிறைவுபெற்றது. ஒரு கதையை உருவாக்குவது முதல் அதை திரைக்கு கொண்டு வருவது வரை 100 இளம் படைப்பளிகளின் தயாரிப்பு திறன் சோதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, 5 குழுக்களால் உருவாக்கப்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டு, 15 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன. சர்வதேச இந்திய திரைப்பட விழா இயக்குநரும், பிரபல திரைப்பட இயக்குநருமான அஷுதோஷ் கோவாரிகர், மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு பிரபாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, இளம்படைப்பாளிகளுக்கு விருதுகளை வழங்கினர்.

சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்ட “ஒன் லாஸ்ட் ஸ்டாப்” படத்திற்கு ரூ.5 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாம் இடம்பெற்ற “எ லிட்டில் சம்திங்” படத்திற்கு 3 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. “எ லிட்டில் சம்திங்” படத்தை இயக்கிய தமன்னா தாக்கூர், சிறந்த இயக்குநருக்கான விருதை வென்றார். சிறந்த நடிகருக்கான விருதை சித்தி பார்க்கர் பெற்றார். இதேபோல், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த படத்தொகுப்பாளர், சிறந்த இசையமைப்பாளர் உள்ளிட்ட 15 பிரிவுகளின் கீழ் இளம் படைபாளிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 48 மணி நேரத்தில் திரைப்படத் தயாரிப்பு சவாலை வெற்றிகரமாக நிறைவு செய்த இளம்படைப்பாளிகளை  பிரபல திரைப்பட இயக்குநர் அஷுதோஷ் கோவாரிகர், மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு பிரபாத் ஆகியோர் பாரட்டினர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341119&reg=3&lang=1

***

SS/LN/SH 


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2341476
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026