இடுகை இடப்பட்ட நாள்:
24 NOV 2026 11:39AM by PIB Chennai
குருநானக் ஜெயந்தி எனப்படும் பிரகாஷ் புரப் புனித நாளை முன்னிட்டு, புதுதில்லியில் உள்ள குருத்வாரா ரகாப் கஞ்ச் சாஹிப்பிற்கு குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (2026 நவம்பர் 24) நேரில் சென்று வழிபட்டார். அங்குள்ள குரு கிரந்த் சாஹிப்பிற்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர் புனித ஆடையான ருமாலா சாஹிப்பைச் சமர்ப்பித்தார்.
இந்தப் புனித நாளில் அனைவருக்கும் தமது மனமார்ந்த வாழ்த்துகளை குடியரசு துணைத்தலைவர் தெரிவித்தார். உண்மை, சமத்துவம், கருணை, தன்னலமற்ற சேவை, உலகளாவிய சகோதரத்துவம் குறித்த குருநானக் தேவ் ஜி-ன் காலத்தால் அழியாத போதனைகள் மனிதகுலத்திற்குத் தொடர்ந்து ஒளியூட்டுவதாகவும், அமைதி, நல்லிணக்கம், பரஸ்பர மரியாதை கொண்ட சமூகத்தை உருவாக்க நம்மை ஊக்குவிப்பதாகவும் அவர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். நேர்மையாக உழைத்தல், பகிர்ந்து உண்ணுதல், இறைநாமத்தை உச்சரித்தல் ஆகிய அவரது போதனைகள் அறநெறி, கண்ணியம், மனிதகுல சேவையுடன் கூடிய வாழ்க்கையை நோக்கி நம்மை வழிநடத்தட்டும் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார்.
இந்நிகழ்வில் மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, தில்லி துணை நிலை ஆளுநர் திரு தரஞ்சித் சிங் சந்து, தில்லி அமைச்சர் திரு மஞ்சிந்தர் சிங் சிர்சா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2340728®=3&lang=1
****
TV/PD/SH