குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குருநானக் தேவின் பிரகாஷ் பர்வ் தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 23 NOV 2026 6:47PM by PIB Chennai

சீக்கிய மதத்தின் முதல் குருவான குருநானக் தேவின் பிரகாஷ் பர்வ் தினத்தை (பிறந்த தினம்) முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:

"குருநானக் தேவின் பிரகாஷ் பர்வ் தினத்தை (பிறந்த தினம்) முன்னிட்டு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும் வாழ்த்துகள்.

குருநானக் தேவ் வழங்கிய 'இக் ஓங்கார்' என்ற போதனை, ஒட்டுமொத்த மனிதகுலத்தின் ஒற்றுமையை வலியுறுத்துகிறது. சாதி வேறுபாடுகள், சமூக ஏற்றத்தாழ்வுகள், பாகுபாடுகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அன்பு, இரக்கம், மனிதநேயத் தொண்டு ஆகியவை நமது வாழ்க்கையின் அடிப்படையாக இருக்க வேண்டும் என்றும் போதித்தார்.

'நாம் ஜபோ, கிரத் கரோ, வந்த் சகோ' என்ற அவரது மூன்று முக்கியக் கொள்கைகள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. இறைவனை நினைத்தல், நேர்மையாகவும் கடினமாகவும் உழைத்துப் பொருளீட்டுதல், கிடைத்த வருமானத்தைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளுதல் என்பதே அவற்றின் பொருள். லங்கர் எனப்படும் அனைவருக்கும் இலவச உணவு வழங்கும் மரபு மூலம் சமூக சமத்துவம், சகோதரத்துவம், தன்னலமற்ற சேவை ஆகியவற்றை அவர் நடைமுறையில் எடுத்துக்காட்டினார்.

இந்தப் புனித நாளில், குருநானக் தேவின் போதனைகளைப் பின்பற்றி, சேவை, சமத்துவம், நல்லிணக்கம் ஆகியவற்றைக் கடைப்பிடித்து, சமுதாயம், நாட்டின் நலனுக்குப் பங்களிக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும்."

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2340489&reg=3&lang=1

(Release ID : 2340489)

****

SK/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2340655) வருகையாளர் எண்ணிக்கை : 3
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati , Malayalam