இடுகை இடப்பட்ட நாள்:
21 NOV 2026 10:58PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில், அருணாச்சலப் பிரதேசத்தின் சட்டம் ஒழுங்கு, உள்நாட்டுப் பாதுகாப்பு, எல்லை மேலாண்மை ஆகியவை குறித்து இடாநகரில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. சீனாவுடனான 1,126 கிலோ மீட்டர் சர்வதேச எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், எல்லைப் பாதுகாப்பு முகாம்கள், ஹெலிபேடுகள், தொலைத்தொடர்பு வசதிகளை மேம்படுத்தவும் அவர் வலியுறுத்தினார்.
2029-க்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் இலக்கின்படி, சட்டவிரோத போதைப் பயிர்களை அழிக்கவும், கடத்தல் கும்பல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், மறுவாழ்வு மையங்களை வலுப்படுத்தவும் அவர் அறிவுறுத்தினார். சைபர் குற்றங்களைத் தடுக்க 1930 உதவி எண்ணைச் சிறப்பாகச் செயல்படுத்தவும், காவல்துறையை நவீனப்படுத்தவும் அவர் கேட்டுக்கொண்டார்.
மாநில வளர்ச்சிக் கூட்டத்தில், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை தற்போதைய 9.18 லட்சத்திலிருந்து 15 லட்சமாக உயர்த்தவும், தரமான தங்கும் விடுதிகளை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு அவர் அறிவுறுத்தினார். முட்டை, இறைச்சி, மீன், பால் ஆகியவற்றின் உற்பத்தியில் மாநிலம் தன்னிறைவு பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
குழந்தைகளுக்கு 100 சதவீத தடுப்பூசி, மருத்துவமனைகளில் பிரசவம் ஆகியவற்றை உறுதிப்படுத்தவும், கிவி, ஆரஞ்சு, ஏலக்காய் உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்கள் உற்பத்தியை ஊக்குவிக்கவும் திரு அமித் ஷா அறிவுறுத்தினார். மாநிலத்தின் முழுமையான வளர்ச்சிக்கு மத்திய அரசு தொடர்ந்து உதவும் என்றும் அவர் உறுதியளித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2339821®=48&lang=2
*******
SK/PLM/RJ