இடுகை இடப்பட்ட நாள்:
21 NOV 2026 12:45PM by PIB Chennai
மருத்துவச் சேவைகளில் மொழிப் பிரச்சினையைப் போக்கி, நோயாளிகளுக்கு எளிதான சிகிச்சை கிடைக்கச் செய்யும் வகையில், மத்திய அரசின் பாஷினி (BHASHINI) தளம் பல்வேறு இந்திய மொழிகளில் செயல்படும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நவம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற்ற உலக டிஜிட்டல் சுகாதார உச்சி மாநாடு 2026-ல் இந்தத் தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் எய்ம்ஸ், ஜிப்மர், இந்திய ராணுவ மருத்துவச் சேவை இயக்குநரகம் ஆகியவை பங்கேற்றன.
ஜிப்மரில், இ-பாஷினி தொழில்நுட்பம் மூலம் மருத்துவர்களின் குரல் பதிவுகளை நோயாளிகளின் மருத்துவக் குறிப்புகளாக மாற்ற முடியும். எய்ம்ஸில், வெவ்வேறு மொழி பேசும் மருத்துவர்கள், நோயாளிகள் இடையிலான உரையாடலுக்கு இந்தத் தொழில்நுட்பம் உதவுகிறது. ராணுவ மருத்துவச் சேவையில், மருத்துவர்கள் பேசும் குறிப்புகள் எழுத்து வடிவமாக மாற்றப்படுகின்றன.
இதுகுறித்து பாஷினி பிரிவின் தலைமைச் செயல் அதிகாரி திரு. அமிதாப் நாக் கூறுகையில், மொழி வேறுபாடு காரணமாக அத்தியாவசிய மருத்துவச் சேவைகள் பாதிக்கப்படக் கூடாது என்றும், இந்தத் தொழில்நுட்பம் மருத்துவச் சேவைகளை அனைவருக்கும் எளிதில் கிடைக்கச் செய்யும் என்றும் தெரிவித்தார்.
பாஷினி தற்போது 36 இந்திய எழுத்து மொழிகள், 23 இந்திய பேச்சு மொழிகள், 35 சர்வதேச மொழிகளை ஆதரிக்கிறது. இதுவரை 11 பில்லியனுக்கும் அதிகமான தொழில்நுட்பச் செயலாக்கங்களை மேற்கொண்டுள்ளது. நாள்தோறும் சுமார் 2.4 கோடி செயலாக்கங்கள் நடைபெறுகின்றன.
மொழித் தடைகளை நீக்கி, மருத்துவச் சேவைகளை எளிமையாக்குவதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2339441®=3&lang=1
(Release ID : 2339441)
****
TV/PLM/SH