இடுகை இடப்பட்ட நாள்:
20 NOV 2026 5:53PM by PIB Chennai
இந்தியாவின் அறிவியல் திறன், தற்சார்பை நோக்கிய நாட்டின் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான், போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பறவைக் காய்ச்சல் நோய்க்கு எதிராக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பூசியை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், போபாலில் சுமார் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் அதிநவீன விலங்கு நோய் ஆராய்ச்சி ஆய்வகம் ஒன்று அமைக்கப்படும் என்று அறிவித்தார். பறவை காய்ச்சல் நோய்க்கு எதிரான இந்த முதல் உள்நாட்டு தடுப்பூசியின் உருவாக்கம், இந்தியாவின் அறிவியல் வலிமைக்கும் தன்னிறைவிற்கும் மற்றுமொரு சான்றாக அமைந்துள்ளது என்று அவர் மேலும் கூறினார். ஒரு டோஸுக்கு ரூ. 1 முதல் ரூ. 2 வரையிலான மலிவு விலையில் கிடைக்கும் இந்தத் தடுப்பூசி, பறவைக் காய்ச்சலின் குறிப்பிட்ட வகை ஒன்றுக்கு எதிராக உருவாக்கப்பட்ட உலகின் முதல் தடுப்பூசியாகும். இது கோழி வளர்ப்புத் துறையில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் என்றும், லட்சக்கணக்கான கோழி வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் என்றும், விலங்குகளால் பரவும் நோய்களால் ஏற்படும் பெரும் பொருளாதார இழப்புகளைக் குறைக்க உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2339191®=3&lang=1
****
TV/BR/SH