குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் நவம்பர் 21, 22 தேதிகளில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 20 NOV 2026 2:37PM by PIB Chennai

குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், 2026 நவம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

மகாராஷ்டிர மாநிலப் பயணத்தின்போது, நாளை (2026 நவம்பர் 21) புனேவில் உள்ள சிம்பயாசிஸ் சர்வதேச நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் அவர் தலைமை விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

இதனைத் தொடர்ந்து, அன்றைய தினம் அவர் தமிழ்நாட்டின் சென்னைக்குச் செல்ல உள்ளார். அங்கு நெல்லை நாடார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 42-வது ஆண்டு விழாவில் திரு சி பி ராதாகிருஷ்ணன் பங்கேற்க உள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338982&reg=3&lang=1

***

SS/PLM/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2339113) வருகையாளர் எண்ணிக்கை : 23
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Telugu , Malayalam