ஆயுஷ்
azadi ka amrit mahotsav

ஆயுஷ் அமைச்சகம் சார்பில் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து பயன்பாடு குறித்த தேசிய அளவிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி

இடுகை இடப்பட்ட நாள்: 19 NOV 2026 3:28PM by PIB Chennai

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஹோமியோபதி ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் சார்பில், நுண்ணுயிர் எதிர்ப்பு திறன் குறித்த தேசிய அளவிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி புதுதில்லியில் 2026 நவம்பர் 17-ம் தேதி அன்று நடைபெற்றது. “ஒரே ஆரோக்கியம், ஒரே செயல்: நுண்ணுயிர் எதிர்ப்பு திறனை இப்போதே தடுப்போம்” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து பயன்பாட்டின் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், அனைத்து நோய்களுக்கு தேவையின்றி ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தினார். பொதுவாக வரக்கூடிய சளி, காய்ச்சல் போன்றவற்றுக்கு ஆன்டிபயாட்டிக் பயன் தருவதில்லை என்றும் கூறினார். மருத்துவரின் ஆலோசனை இன்றி சுயமாக மருந்துகளை எடுத்துக்கொள்ள கூடாது என்றும் கூறிய அவர், இதனால் நுண்ணுயிர் எதிர்ப்பு திறன் நமக்கு சவாலாக அமைந்துவிடும் எனவும் குறிப்பிட்டார். ஆன்டியாட்டிக் எடுத்துக்கொள்வதற்கு பதிலாக, சுத்தமான குடிநீர் அருந்துவது, கைகளை சுத்தமாக வைத்துக்கொள்வது, சுகாதாரத்தைக் கடைபிடிப்பது, உணவு பாதுகாப்பு போன்ற பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை பெறலாம் என்றும் மத்திய இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் தெரிவித்தார்.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338433&reg=3&lang=1

***

TV/LN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2338721) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Assamese