வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா-இத்தாலி இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் இத்தாலி துணைப்பிரதமருடன் கலந்துரையாடினார்

இடுகை இடப்பட்ட நாள்: 19 NOV 2026 1:01PM by PIB Chennai

இந்தியா-இத்தாலி பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணையத்தின் 23-வது அமர்வு ரோம் நகரில் 2026 நவம்பர் 18 அன்று நடைபெற்றது. இதற்கு மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், இத்தாலி துணைப்பிரதமரும், வெளியுறவு, சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சருமான திரு அன்டோனியோ தஜானியுடன் இணைந்து தலைமை தாங்கினார். அப்போது இருதரப்பு பொருளாதார, வர்த்தக ஒத்துழைப்பின்  முன்னேற்றம் குறித்து அமைச்சர்கள் ஆய்வு செய்ததுடன் வர்த்தகம், முதலீடு, தொழில்துறை நட்புறவு ஆகியவற்றை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தனர். 2025-29-ம் ஆண்டிற்கான கூட்டு உத்திசார் செயல்திட்டம், 2026 மே மாதத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி, இத்தாலிக்கு மேற்கொண்ட பயணத்தின் முடிவுகளின் அடிப்படையில் இந்தியா-இத்தாலி இடையே சிறப்பு உத்திசார் நட்புறவை வலுப்படுத்துவதற்கான தங்களுடைய உறுதிப்பாட்டை அவர்கள் மீண்டும் வலியுறுத்தினார்கள்.

வாகனம், விண்வெளி, தொழில்துறை 4.0, வேளாண்மை, வேளாண் தொழில்நுட்பம், போக்குவரத்து, எரிசக்தி, முக்கிய கனிமங்கள், அறிவியல், புதுமைக்கண்டுபிடிப்பு, கலாச்சாரம், சுற்றுலா, திறன்மேம்பாடு, தொழில்முனைவு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு குறித்த விவாதங்கள் இடம்பெற்றன.

2029-ம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை 20 பில்லியன் யூரோ அளவிற்கு எடுத்துச்செல்ல வேண்டுமென்று இருதரப்பினரும் உறுதிபூண்டனர்.

  மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338314&reg=3&lang=1&_gl=1

***

SS/IR/PS/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2338679) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , Nepali , Bengali , Bengali-TR , Gujarati , Malayalam