விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் 652 சமூக விதை வங்கிகளைக் கணக்கெடுத்து புதிய திறன் மேம்பாட்டுக் கையேடு வெளியீடு

இடுகை இடப்பட்ட நாள்: 18 NOV 2026 7:39PM by PIB Chennai

நார்வேயின் ஃபிரிட்ஜோஃப் நான்சன் நிறுவனம் மற்றும் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை இணைந்து செயல்படுத்தும் ‘டைவர்சிஃபார்ம்-இந்தியா’ (DIVERSIFARM-India) திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள குறைந்தது 1,000 சமூக விதை வங்கிகளில் 652 வங்கிகள் கணக்கெடுக்கப்பட்டு, அவற்றின் விவரங்கள் டிஜிட்டல் வரைபடத் தொகுப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன. புது தில்லியில் நவம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தேசியக் கருத்தரங்கில், சமூக விதை வங்கிகளின் டிஜிட்டல் வரைபடத் தொகுப்பு, கொள்கை விளக்கக் குறிப்பு மற்றும் ஒடிசா மாநிலத்திற்கான 10 அம்சச் செயல் திட்டம் ஆகியவை வெளியிடப்பட்டன.

தாவர ரகங்கள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமைகள் ஆணையத்தின் தலைவர் டாக்டர் திரிலோச்சன் மொஹபத்ரா புதிய திறன் மேம்பாட்டுக் கையேட்டை வெளியிட்டார். நார்வே தூதர் திருமதி மே-எலின் ஸ்டெனர் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்நிகழ்வில், சிறு விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பில் சமூக விதை வங்கிகளின் பங்கு வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பான கையேடு மற்றும் டிஜிட்டல் தொகுப்பினை https://communityseedbanks.in/ என்ற இணையதளத்தில் காணலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338118&reg=3&lang=1  

***

SK/SE/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2338603) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Punjabi , Kannada