சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை மத்திய ஒழுங்குமுறை கண்காணிப்பின் கீழ் கொண்டுவர புதிய மருந்துகள், மருத்துவப்பரிசோதனை விதிமுறைகள் 2019-ல் திருத்தம் மேற்கொள்ள மத்திய சுகாதார அமைச்சகம் முன்மொழிந்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 19 NOV 2026 10:31AM by PIB Chennai

விதிமுறை 2(1)(டபிள்யூ)(வி)-ன் கீழ்  புதிய மருந்து என்ற வரையறையில் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை  சேர்ப்பதற்காக நவம்பர் 6 தேதியிட்ட  வரைவு அரசிதழ் அறிவிப்பு  ஜிஎஸ்ஆர் 983(இ) மூலம் புதிய மருந்துகள் மற்றும் மருத்துவப் பரிசோதனை விதிமுறைகள் 2019-ல் மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சகம் ஒரு திருத்தத்தை முன்மொழிந்துள்ளது.

நுண்ணுயிர் எதிர்ப்புத்திறன் என்பது  உலக நாடுகளில் நிலவக்கூடிய பொது சுகாதார கவலையாகும். இதற்கு ஒருங்கிணைந்த நடவடிக்கை முக்கியமாக தேவைப்படுகிறது. ஜி20 புதுதில்லி தலைவர்களின் பிரகடனமும், ஒருங்கிணைந்த சுகாதாரம் என்ற அணுகுமுறை மூலம் நுண்ணுயிர் எதிர்ப்புத்திறனை கையாள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது.

போதுமான ஒழுங்குமுறை பரிசீலனையின்றி நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து உற்பத்திக்கான உரிமங்கள் அளிக்கப்படுவது குறித்த விவகாரங்களை கருத்தில் கொண்டு இந்த முன்மொழியப்பட்ட திருத்தம்  மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் உயிரி தன்மை, உயிரியல் சமநிலை, நிலைத்தன்மை ஆய்வுகள் போன்ற ஆய்வுகளுக்கான தேவையும் இடம்பெற்றுள்ளது. இது போன்ற மதிப்பீடுகள் இல்லாதது, நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளின் தரம், பாதுகாப்பு, செயல்திறன் ஆகியவற்றை  பாதிக்கலாம். தரம் குறைந்த அல்லது செயல்திறனற்ற நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், நோயாளிகளின் பாதுகாப்புக்கு அபாயத்தை ஏற்படுத்தலாம்.
 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338243&reg=48&lang=1

***

SS/IR/PS/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2338444) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Nepali , Marathi , Assamese , Gujarati