பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வேல்ஸ் இளவரசர், இளவரசியைச் சந்தித்த பிரதமர்

இடுகை இடப்பட்ட நாள்: 18 NOV 2026 9:02PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, 2026 நவம்பர் 18 அன்று புதுதில்லியில் வேல்ஸ் இளவரசரையும், இளவரசியையும் சந்தித்தார்.

இந்திய–இங்கிலாந்து இருதரப்பு உறவுகள், இந்திய–இங்கிலாந்து  தொலைநோக்குப் பார்வை 2035 வழிகாட்டுதலின் கீழ் தொடர்ந்து வலுப்பெற்று வருவதையும், 2026 ஜூலை மாதம் இந்திய–இங்கிலாந்து விரிவான பொருளாதார, வர்த்தக ஒப்பந்தம் (சிஇடிஏ) நடைமுறைக்கு வந்ததன் மூலம் இந்த உறவுகள் மேலும் வலுப்பெற்றுள்ளதையும் பிரதமர் வரவேற்றார்.

அவசரமான சுற்றுச்சூழல் சவால்களுக்குப் புதுமையான தீர்வுகளை ஊக்குவிப்பதில் 'எர்த்ஷாட் பரிசு' ஆற்றி வரும் பங்களிப்பைப் பிரதமர் பாராட்டினார். 2026 நவம்பர் 17 அன்று மும்பையில் நடைபெற்ற 'எர்த்ஷாட் பரிசு' வழங்கும் விழா உட்பட, பல்வேறு நிகழ்வுகளில் இந்தியப் புத்தாக்கக் கலைஞர்களை அங்கீகரித்ததையும், உலகளாவிய சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதில் அவர்கள் ஆற்றிய பங்களிப்புகளைப் பாராட்டியதையும் அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, நிதிநுட்பம், மக்களுக்கு இடையேயான உறவுகள் ஆகியவற்றில் ஒத்துழைப்பு உட்பட, இந்திய-இங்கிலாந்து விரிவான உத்திசார்  கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள இந்தச் சந்திப்பு ஒரு வாய்ப்பை உருவாக்கியது.

மாண்புமிகு மன்னர் மூன்றாம் சார்லஸ், பிரதமர் திரு ஆண்டி பர்ன்ஹாம் ஆகியோருக்கு திரு மோடி வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338169&reg=3&lang=1&_gl=1  

***

SK/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2338291) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: हिन्दी , English , Urdu , Marathi , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Kannada , Malayalam