வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் முதலீடு தொடர்பாக இத்தாலிய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆலோசனை

இடுகை இடப்பட்ட நாள்: 18 NOV 2026 2:52PM by PIB Chennai

மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், அரசுமுறை பயணமாக இத்தாலியில் உள்ள ரோம் நகருக்கு சென்றார். இந்நிலையில், 2026 நவம்பர் 17-ம் தேதி அன்று இத்தாலியை சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், மூத்த தலைவர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில், வால்டர் டோஸ்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் லுகா டோஸ்டோ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த சந்திப்பின்போது இத்தாலிய முதலீடுகளை இந்தியாவில் விரிபடுத்துவது, இருநாடுகள் இடையே தொழில்நுட்ப பரிமாற்றம், இந்தியாவின் கூட்டாளிகளுடன் இத்தாலி நிறுவனங்கள் இணைந்து செயல்படுவது உள்ளிட்ட அம்சங்களில் கவனம் செலுத்தப்பட்டது. உற்பத்தி, விமானப் பராமரிப்பு, வெப்ப ஆற்றல் சேமிப்பு, மருந்து மூலப்பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில் தங்களுடைய தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு கொண்டுவருவதிலும், இந்திய தொழில் துறையுடன் இணைந்து செயல்படவும் விருப்பம் உள்ளதாக இத்தாலிய நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு வரவேற்பு தெரிவித்த மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல், விமானப் போக்குவரத்து, சுகாதாரத்துறை, கட்டுமானம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட இத்தாலிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இருநாடுகள் இடையே முன்னோடி திட்டங்கள், இந்திய நிறுவனங்களுடன் கூட்டு ஆய்வு ஆகியவற்றை முன்னெடுத்து செல்வது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்தியா- இத்தாலி இடையேயான சிறப்பு உத்திசார் கூட்டாண்மையின் கீழ், இருதரப்பு வர்த்தகத்தை 2029-ம் ஆண்டுக்குள் 20 பில்லியன் டாலராக உயர்த்த இதில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2337852&reg=3&lang=1

****

SK/LN/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2338228) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Bengali , Bengali-TR , Gujarati