இடுகை இடப்பட்ட நாள்:
18 NOV 2026 6:40PM by PIB Chennai
புதுதில்லியில் இன்று நடைபெற்ற ஸ்ரீ ராம் வணிகக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்கள், உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களாக உருவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இது, இந்தியாவை உலகளாவிய அறிவுசார் வல்லரசாக மாற்றும் தேசிய தொலைநோக்குப் பார்வையை நனவாக்க உதவுவதுடன், உயர்கல்விக்காக இந்தியாவுக்குள்ளிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் திறமையான மாணவர்களை ஈர்க்கவும் உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த பத்து ஆண்டுகளில், உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது என்று குடியரசுத்தலைவர் கூறினார். உள்கட்டமைப்பில் முன்னெப்போதும் இல்லாத அளவிலான விரிவாக்கம், புரட்சிகரமான டிஜிட்டல் மாற்றம், நிதி உள்ளடக்கம், சமூக மேம்பாடு ஆகியவற்றை நாடு அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் புத்தொழில் நிறுவனங்களுக்கு உகந்த சூழல் நிலவுவதாகவும், வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் குடியரசுத்தலைவர் கூறினார்.
இந்தியா புதிய ஆற்றலுடனும் தொலைநோக்குப் பார்வையுடனும் உலக அரங்கில் தனது பொருளாதாரப் பங்கினை விரிவுபடுத்தி வருவதாகக் குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார். நமது லட்சிய முயற்சிகளை இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்வார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். உலகில் மிக அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்வதுடன், உலகின் மிகச்சிறந்த இளம் திறமையாளர்களைக் கொண்ட நாடாகவும் இந்தியா விளங்குகிறது, என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338083®=3&lang=1
****
SK/RB/RJ