இடுகை இடப்பட்ட நாள்:
18 NOV 2026 6:38PM by PIB Chennai
கஷ்மீர் பள்ளத்தாக்கில் லஷ்கர் அமைப்பின் உள்ளூர் பயங்கரவாதிகளில் எஞ்சியிருந்த கடைசி நபரான லத்தீஃப் பட்-ஐ, குல்காமில் இன்று அதிகாலை நடைபெற்ற நடவடிக்கையில் சுட்டு வீழ்த்தியதற்காக, ஜம்மு-காஷ்மீர் காவல்துறை , ராணுவம், மத்திய ரிசர்வ் காவல் படை, உளவு அமைப்புகளைச் சேர்ந்த வீரர்களை மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா பாராட்டியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
“ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, இந்திய ராணுவம், மத்திய ரிசர்வ் காவல் படை, உளவு அமைப்புகளின் ஒருங்கிணைந்த முயற்சியால், காஷ்மீர் பள்ளத்தாக்கில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் கடைசி உள்ளூர் பயங்கரவாதியான லத்தீஃப் பட், இன்று அதிகாலை குல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவருடன் தொடர்புடைய மற்றொரு பயங்கரவாதியான உமர் நிசார், முந்தைய நாள் குல்காமில் நடைபெற்ற தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த நடவடிக்கை முழுவதும் மிக உயர்ந்த அளவிலான ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளப்பட்டது. ஜம்மு காஷ்மீர் காவல்துறை, ராணுவம், மத்திய ரிசர்வ் காவல் படை, உளவுத்துறை அமைப்புகளைச் சேர்ந்த துணிச்சல்மிக்க வீரர்களுக்கு நாடு தனது வீர வணக்கத்தைச் செலுத்துகிறது.”
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338078®=3&lang=1
****
SK/RB/RJ