இடுகை இடப்பட்ட நாள்:
18 NOV 2026 4:31PM by PIB Chennai
பயங்கரவாதத்திற்கு எதிரான பிரதமர் திரு நரேந்திர மோடியின் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கைக்கு ஏற்ப, புதுதில்லியில் நாளை ( நவம்பர் 19) தொடங்கி இரண்டு நாள் நடைபெறும் பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தொடங்கி வைக்கிறார். உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய புலனாய்வு முகமையால் நடத்தப்படும் இந்த மாநாடு, ‘எல்லை தாண்டிய பயங்கரவாதம்’ என்ற கருப்பொருளில் நடைபெற உள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பில் அனைத்துத் தரப்பினரிடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதில் இந்த மாநாடு சிறப்பு கவனம் செலுத்துகிறது. பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக வெளிநாடுகளிடமிருந்து ஆதாரங்களைப் பெறுதல், பயங்கரவாத எதிர்ப்பு விசாரணைகளில் டிஜிட்டல் தடயவியல், தரவு பகுப்பாய்வு ஆகியவற்றைப் பயன்படுத்துதல், வழக்குகளைத் திறம்பட நிர்வகித்தல், தீவிரவாதமயமாக்கலைத் தடுத்தல், தேசியப் பாதுகாப்பிற்கு ஏற்படும் புதிய சவால்கள் குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. மேலும், மாநிலக் காவல்துறையினருக்குப் புதிய குற்றவியல் சட்டங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. இம்மாநாட்டில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மூத்த காவல்துறை அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகள், சட்டம், தடயவியல், தொழில்நுட்பத் துறை நிபுணர்கள் பங்கேற்க உள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2337930®=3&lang=1
***
SK/PD/PS