இடுகை இடப்பட்ட நாள்:
18 NOV 2026 2:27PM by PIB Chennai
புதுதில்லியின் காஜிப்பூரில் இயங்கி வந்த சட்டவிரோத அல்பிரசோலம் தயாரிப்பு ஆய்வகத்தை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் 2026 நவம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் கண்டறிந்து நடவடிக்கை எடுத்துள்ளது. கணினி விற்பனைக் நிலையம் என்ற பெயரில் செயல்பட்டு வந்த இந்த இடத்தில், ரசாயனக் கலவைக் கருவிகள், நீர் குளிரூட்டி ஆகியவை அடங்கிய முழுமையான தயாரிப்புக் கூடம் இயங்கி வந்தது சோதனையில் கண்டறியப்பட்டது.
இந்தச் சோதனையில் திட, திரவ வடிவிலான 148 கிலோ அல்பிரசோலம் இடைநிலைப் பொருள், சுமார் 1,046 கிலோ மூலப்பொருட்கள், ரசாயனங்கள், 188 லிட்டர் கூடுதல் ரசாயனத் திரவங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போதைப்பொருள் தடுப்புச் சட்டம் 1985-ன் கீழ், ஆய்வகக் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், ஆய்வகத்தை நடத்தி வந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக 2026 அக்டோபர் 29 அன்று உத்தரப் பிரதேசத்தின் ஜலான் மாவட்டத்தில் சட்டவிரோத போதைப்பொருள் தயாரிப்பு ஆய்வகத்தை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் கண்டறிந்து, சுமார் 1,100 கிலோ போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2337828®=3&lang=1&_gl=1
***
SK/PD/PS