திரைப்படத் துறையின் எல்லைகளை விரிவுபடுத்தும் வகையில், 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா 2026, அனிமேஷன் பிரிவை அறிமுகப்படுத்துகிறது. ஜப்பான், பிரான்ஸ், சீனா, சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து சர்வதேச அனிமேஷன் திரைப்படங்களைக் கொண்டுள்ள இப்பிரிவு, கண்களைக் கவருவதோடு மட்டுமின்றி மனதைக் கவரும் படங்களை அறிமுகப்படுத்துகிறது.
ஜப்பானிய அனிமேஷன் படமான செர்ரி அண்ட் விர்ஜின் என்ற படத்தை மசனாடோ கவாஜிரி இயக்கியுள்ளார். 2026-ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம், பெண்களிடம் பேசுவதற்குத் திணறும் 32 வயது எரோடிக் மாங்கா கலைஞர் ரியோ மற்றும் நிஜ வாழ்க்கையில் ஆண்களுடன் பழகுவதில் அதே சிரமத்தை எதிர்கொள்ளும் 28 வயது அமி ஆகியோரைப் பற்றியதாகும். தங்களுடைய அச்சங்கள், காதல் அனுபவமின்மை இருந்தபோதிலும், இருவரும் சந்தித்து ஒருவரையொருவர் புரிந்துகொள்கிறார்கள். தங்கள் பாதுகாப்பின்மைக்கு அப்பால் உண்மையான பிணைப்பின் அமைதியான மகிழ்ச்சியைக் கண்டறிகிறார்கள்.
இப்படம், நகைச்சுவையுடனும் சொல்லப்பட்டுள்ளது. ஒசாக்கா கலைப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான கவாஜிரி, தனது 2018 குறும்படமான ஏ ஜப்பானிஸ் பாய் ஹூ ட்ராஸ் மூலம் பரவலான அங்கீகாரத்தைப் பெற்றார். இது ஜப்பானிலும் வெளிநாடுகளிலும் தொடர்ந்து பாராட்டுகளைப் பெறும் அழகியலை உருவாக்கியுள்ளது.
சமகால நகைச்சுவைக்கு ஏற்ப மனதை தொடும் பிரெஞ்சு இயங்குபடம் ஜிம் குயின். இதனை நிக்கோலஸ் அதானே, மார்க்கோ நிகுயேன் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். பாரிஸில் அமைக்கப்பட்டுள்ள இத்திரைப்படம், நகரின் கே சமூகத்தினரிடையே போற்றப்படும் பிரபல உடல்தகுதி நிபுணரான ஜிம்மை மையமாகக் கொண்டுள்ளது. கே ஆண்களை நேராக மாற்றத் தொடங்கும் ஹெட்டிரோசிஸ் என்ற விசித்திரமான வைரஸ் காரணமாக அவருடைய வாழ்க்கை ஒரே இரவில் மாறிவிடுகிறது. இதனால் அவர் தனது பின்தொடர்பவர்கள், நண்பர்கள், சமூக அந்தஸ்தை இழக்க நேரிடுகிறது. குறைவாக அறியப்பட்ட போதிலும் நம்பிக்கையான இளையவரான லூசியன் மட்டுமே அவருடன் நிற்கிறார். ஒரு குணப்படுத்தும் மருந்தை வைத்துள்ளதாக வதந்தி பரப்பும் மருத்துவரைக் கண்டுபிடிக்க மாராய் நகரின் வீதிகள் வழியாக ஜிம் பயணிக்கிறார். இரு இயக்குநர்களும் புகழ்பெற்ற கோபிலின்ஸ் இயங்குபட பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2337808®=3&lang=1
***
SK/IR/SM/PS