பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசியான் உச்சி மாநாட்டிற்கு இடையே பிரதமர் திரு நரேந்திர மோடி பிலிப்பைன்ஸ் அதிபரைச் சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 17 NOV 2026 4:29PM by PIB Chennai

பிலிப்பைன்ஸின் மணிலாவில் இன்று (2026 நவம்பர் 17) நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டிற்கிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி, பிலிப்பைன்ஸ் குடியரசு அதிபர் திரு பெர்டினாண்ட் ஆர் மார்கோஸ் ஜூனியரை சந்தித்து பேசினார்.

இந்த ஆண்டு ஆசியான் அமைப்புக்கு தலைமை தாங்கிய பிலிப்பைன்ஸின் வெற்றிகரமான செயல்பாட்டிற்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். 2024-ம் ஆண்டு முதல் ஆசியான் அமைப்பில் இந்தியாவுக்கான ஒருங்கிணைப்பு நாடாக பிலிப்பைன்ஸ் ஆற்றிவரும் பங்களிப்புக்கும், ஆசியான்-இந்தியா உறவு வலுப்பட பிலிப்பைன்ஸ் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதற்கும் பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.    

2026-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் புதுதில்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கு, ஆசியான் தலைவராக இருந்த பிலிப்பைன்ஸ் அதிபர் திரு பெர்டினாண்ட் ஆர் மார்கோஸ் ஜூனியரை அழைத்திருந்ததையும், அப்போது இருவரும் சந்தித்து உரையாடியதையும் இரு தலைவர்களும் நினைவுகூர்ந்தனர். 2025 ஆகஸ்ட் மாதம் அதிபர் மார்கோஸ் ஜூனியர் இந்தியாவிற்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின்போது, இருநாடுகள் இடையேயான உத்திசார் கூட்டண்மையின் கீழ், பல்வேறு துறைகளில் ஒத்துழைத்து செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, ராணுவம், பாதுகாப்பு, விண்வெளி, ரயில்வே உள்கட்டமைப்பு, நிதித் தொழில்நுட்பம், வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு வலுப்பெற்று வருவதை இரு தலைவர்களும் பாராட்டினர். பிராந்திய, சர்வதேச அளவில் முக்கிய பிரச்சினைகள் குறித்து இருநாட்டு தலைவர்களும் தங்களது கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.    

(Release ID: 2337453)

 

***

PD/LN/SH 


(வெளியீட்டு அடையாள எண்: 2337595) வருகையாளர் எண்ணிக்கை : 18
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Assamese , Gujarati , Odia , Kannada , Malayalam