சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் கார்பன் உமிழ்வு பெருமளவு குறைந்து வருகிறது: மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ்

இடுகை இடப்பட்ட நாள்: 17 NOV 2026 12:59PM by PIB Chennai

துருக்கியின் அண்டாலியாவில் ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்ற மாநாட்டின்போது தொழில்துறை தலைவர்கள் வட்டமேசை கூட்டத்தில் தொழில்துறை மாற்றத்திற்கான தலைமைத்துவத் குழுவின் 3-ம் கட்டத்தை மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் இன்று தொடங்கி வைத்தார்.

இந்த வட்டமேசை மாநாட்டிற்கு திரு பூபேந்தர் யாதவும், ஸ்வீடன் நாட்டின் பருவநிலை மற்றும் தொழில்துறை அமைச்சர் ஹெலேனா டைசென்னும் இணைந்து தலைமை தாங்கினர். ஐநா பருவநிலை நடவடிக்கையின் உதவிச் செயலாளரும் சிறப்பு ஆலோசகருமான திரு செல்வின் ஹார்ட்டும் இதில் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய திரு பூபேந்தர் யாதவ், புவிசார் அரசியல் மோதல்கள், ஸ்திரத்தன்மையற்ற எரிசக்தி சந்தைகள், வளர்ச்சி முன்னுரிமைகளுக்கு இடையேயான போட்டிகள் ஆகிய சூழலில் சர்வதேச ஒத்துழைப்பு குறிப்பாக, கார்பன் வெளியேற்றத்தை குறைப்பது மிகவும் முக்கியமானது என்று தெரிவித்தார்.

வறுமை ஒழிப்பு, எரிசக்தி அணுகல், வேலைவாய்ப்பு உருவாக்கம், உள்கட்டமைப்பு மேம்பாடு போன்ற இந்தியாவின் முன்னுரிமைகள் நீடித்த எதிர்காலத்தை நோக்கிய செயல்பாட்டுடன் இணைந்து முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் இந்தியாவின் சாதனைகள் குறித்து எடுத்துரைத்த அமைச்சர், 2005-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டுகளுக்கிடையேயான காலகட்டத்தில், கார்பன் உமிழ்வு 37.38 சதவீதம் அளவிற்கு குறைந்ததாகவும், புதைபடிவ எரிபொருள் இல்லாத மின்உற்பத்தித் திறன் 50 சதவீதம் அளவிற்கு அதிகரிப்பது என்ற இலக்கு, நிர்ணயிக்கப்பட்ட 5 ஆண்டுகாலத்திற்கு முன்பே அடைந்ததாகவும் குறிப்பிட்டார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2337325&reg=3&lang=1

***

PD/IR/LDN/GS 


(வெளியீட்டு அடையாள எண்: 2337387) வருகையாளர் எண்ணிக்கை : 22
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Nepali , Gujarati , Kannada , Malayalam