இடுகை இடப்பட்ட நாள்:
16 NOV 2026 9:52PM by PIB Chennai
ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் இன்று (2026 நவம்பர் 16) நடைபெற்ற ‘ராமோஜி சிறப்பு விருதுகள் – 2026’ விழாவில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா பங்கேற்று சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் ஆந்திரப் பிரதேச ஆளுநர் திரு எஸ் அப்துல் நசீர், முதலமைச்சர் திரு சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ராமோஜி ராவின் 90-வது பிறந்தநாளை நினைவுகூர்ந்த திரு அமித் ஷா, சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து 'ஈநாடு' நாளிதழ், ஈடிவி தொலைக்காட்சி, ராமோஜி திரைப்பட நகரம் ஆகியவற்றின் மூலம் ஊடகம், மொழி மற்றும் திரைப்படத் துறைகளுக்கு அவர் ஆற்றிய தன்னலமற்ற சேவையைப் பாராட்டினார். ஜனநாயகத்தின் நான்காவது தூணை அவர் பாதுகாத்ததாகவும் குறிப்பிட்டார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான 12 ஆண்டுகால ஆட்சியில், 50 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளதாகவும், 98% கிராம பஞ்சாயத்துகள் 4ஜி இணைய இணைப்பைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் உலகின் மிக நீளமான ஹைட்ரஜன் ரயில் இயக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் ரூ.30 லட்சம் கோடி முதலீடுகள் செயல்பாட்டிற்கு வந்துள்ளதாகவும், விசாகப்பட்டினத்தில் கூகுள் நிறுவனம் அமைக்கும் 15 பில்லியன் டாலர் மதிப்பிலான செயற்கை நுண்ணறிவு மையம் நாட்டிற்கே பெருமை சேர்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2337215®=3&lang=1
***
PD/NB/GS