விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சர்வதேச தென்னை அமைப்பின் 62-வது அமர்வு கொச்சியில் நடைபெறுகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 16 NOV 2026 3:29PM by PIB Chennai

சர்வதேச தென்னை அமைப்பின் 62-வது அமர்வு, அமைச்சர்கள் நிலையிலான மாநாடு கேரளத்தின் கொச்சியில் 2026 நவம்பர் 17 முதல் 20 வரை நடைபெற உள்ளது. மத்திய வேளாண்மை, விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தென்னை வளர்ச்சி வாரியம், இந்தோனேசியாவின் ஜகார்த்தாவைத் தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச தென்னை அமைப்பு ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றன. 1969-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய-பசிபிக் பொருளாதார, சமூக ஆணையத்தின் கீழ் நிறுவப்பட்ட இந்த அமைப்பு, அதிக அளவில் தென்னை விவசாயம் செய்து வரும் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்தும் பொதுவான தளமாகச் செயல்படுகிறது.

2026 நவம்பர் 17 அன்று நடைபெறும் தொடக்க விழாவை மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலத் துறை இணையமைச்சர் திரு ராம் நாத் தாக்கூர் தொடங்கி வைக்கிறார். இம்மாநாட்டில் ஆசிய-பசிபிக் பிராந்திய உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள், உயரதிகாரிகள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்துறையினர் பங்கேற்கின்றனர். தொடக்க விழாவின் ஒரு பகுதியாகச் சிறந்த தேசிய தென்னை விவசாயி, சிறந்த தென்னை விஞ்ஞானி, சிறந்த தேசிய தென்னை தொழில்முனைவோர் ஆகிய 3 பிரிவுகளில் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. உலகளாவிய தென்னைத் தொழிலின் நிலையான வளர்ச்சிக்கு இம்மாநாடு பெரிதும் உதவும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2336892&reg=3&lang=1

***

SS/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2337099) வருகையாளர் எண்ணிக்கை : 15
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Malayalam