குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

இளைஞர்களை சமூகத்திற்கு அர்த்தமுடைய பங்களிப்பிற்காகவும், உலகின் பொறுப்புமிக்க குடிமக்களாகவும் உருவாக்க வேண்டும் – குடியரசு துணைத்தலைவர்

இடுகை இடப்பட்ட நாள்: 16 NOV 2026 3:03PM by PIB Chennai

ஒடிசாவின் கட்டாக்கில் ஸ்ரீஸ்ரீ பல்கலைக்கழகத்தில் தனித்துவமிக்க கல்விக் கட்டடத்தைக் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று திறந்து வைத்தார். ஒடிசா ஆளுநர் திரு பிரஜ் மோகன்ராம், ஒடிசா முதலமைச்சர் திரு மோகன் சரண் மாஜி, ஸ்ரீஸ்ரீ பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் ஆயுள்கால தலைவருமான குருதேவ் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஆகியோர் முன்னிலையில் அவர் இதனை திறந்து வைத்தார்.

அப்போது பேசிய குடியரசு துணைத்தலைவர், இந்நிகழ்ச்சி ஒரு கட்டடத்தைத் திறப்பது என்று இல்லாமல், தொலைநோக்குப் பார்வையையும், ஊக்கமளிக்கக்கூடிய கல்வியையும், இந்தியாவின் உன்னதமிக்க கலாச்சார பாரம்பரியத்தையும், இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான அர்ப்பணிப்பையும் கொண்டாடும் நிகழ்வு என்று கூறினார்.

ஸ்ரீஸ்ரீ பல்கலைக்கழகம் குருதேவ் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் சிறப்பான தொலைநோக்குப் பார்வையின் வெளிப்பாடு என்று விவரித்த குடியரசு துணைத்தலைவர், கல்வி தொடர்பான குருதேவின் புரிந்துணர்வு வழக்கமான கல்வி கற்றலுக்கு அப்பாற்பட்டுள்ளதாக தெரிவித்தார். கிழக்கத்திய நாடுகளின் ஞானமும், மேற்கத்திய அறிவும், சங்கமிக்கக்கூடிய தளமாக உருவாக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம் 2012-ம் ஆண்டு தமது பயணத்தைத் தொடங்கியதாக கூறினார். உண்மையான கல்வி என்பது தனிமனிதரின் பண்பு, உணர்வு, கருணை ஆகியவற்றை வளர்க்க வேண்டும் என்பது அடிப்படை தத்துவமாகும். தற்போதைய காலக்கட்டத்தில் இந்த தொலைநோக்குப் பார்வையை வலியுறுத்திய அவர், கல்வி என்பது இளைஞர்களை வெறும் கல்வி சார்ந்த வெற்றிக்காக தயார்படுத்தாமல் சமூகத்திற்கு அர்த்தமுடைய பங்களிப்பிற்காகவும் உலகின் பொறுப்புமிக்க குடிமக்களாக அவர்களை உருவாக்கவும் உதவ வேண்டும் என்று அவர் கூறினார்.

ஸ்ரீஸ்ரீ பல்கலைக்கழகம் உலகின் மகிழ்ச்சிகரமான வளாகம் என்று தாமே வர்ணிப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், மகிழ்ச்சி என்பது மனித சமூகம் விரும்பும் அம்சம் என்றும் அது இந்தியாவின் கலாச்சாரம், மரபுகளில் ஆழமாக வேரூன்றி உள்ளதாகவும் கூறினார்.

இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில் பெரும் எண்ணிக்கையிலான நிறுவனங்கள் மூலம் உயர்கல்வித் துறை சிறப்புமிக்க மாற்றத்தைக் கண்டுள்ளதாக திரு சி பி ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2336875&reg=3&lang=1

***

SS/IR/SM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2337091) வருகையாளர் எண்ணிக்கை : 19
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Gujarati , Odia , Telugu , Malayalam