பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களைப் பிரதமர் கவுரவித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 09 AUG 2026 10:07PM by PIB Chennai

2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற இந்திய  விளையாட்டு வீரர்களைப்  பிரதமர் திரு நரேந்திர மோடி, ‘7, லோக் கல்யாண் மார்க்' இல்லத்தில் சந்தித்து உபசரித்தார்.  விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடிய திரு மோடி, போட்டிகளின் போது அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் கேட்டறிந்தார். 

விளையாட்டு வீரர்களின் சாதனைகள், ஒட்டுமொத்த நாட்டிற்கும் மிகுந்த பெருமை அளிப்பதாகவும், பல்வேறு இளைஞர்கள் விளையாட்டுத் துறையில் ஈடுபட அவர்களை ஊக்குவிக்கும் என்றும் பிரதமர் கூறினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது: 

“2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற நமது சிறப்பான வெற்றியாளர்களை '7, லோக் கல்யாண் மார்க்' இல்லத்தில் கவுரவித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் போட்டிகள் குறித்த அவர்களது அனுபவங்களை நான் கேட்டறிந்தேன்.

அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சிறப்பான விளையாட்டுத்திறன் மூலம் நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர். அவர்களது வெற்றி ஏராளமான இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும்.”

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296926&reg=3&lang=1

***

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2337071) வருகையாளர் எண்ணிக்கை : 14