வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆந்திரப் பிரதேசத்தில் சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பான உச்சிமாநாடு

இடுகை இடப்பட்ட நாள்: 16 NOV 2026 11:33AM by PIB Chennai

இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், சர்வதேச அளவில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பான உச்சிமாநாடு, 2026 நவம்பர் 12, 13-ம் தேதிகளில் ஆந்திர பிரதேசம், விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதன் தொடக்க விழாவில், மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் திரு கொனிடலா பவன் கல்யாண், மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கொள்கை வகுப்பாளர்கள், சர்வதேச பிரதிநிதிகள், தொழிலதிபர்கள், முதலீட்டார்கள் ஆகியோர் கலந்துகொண்ட இந்த உச்சி மாநாட்டில், வர்த்தகம், தொழில்நுட்பம், பொருளாதார ஒத்துழைப்பு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. சர்வதேச அளவிலான வர்த்தகம், விநியோக தொடர்புகள், உற்பத்தியில் நவீனத்துவம், பாதுகாப்பு தொழில்நுட்பம், கனிமங்கள், செயற்கை நுண்ணறிவு, பசுமை எரிசக்தி போன்றவற்றை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடினர். ஆந்திரப் பிரதேசத்தில் தொழில்துறையை மேம்படுத்தும் வகையில், 7,223 ஏக்கர் பரப்பளவில், ரூ.31,360 கோடி முதலீட்டில் அமையவுள்ள திட்டங்கள் குறித்தும், இதன்மூலம் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் இம்மாநாட்டில் எடுத்துரைக்கப்பட்டது.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2336751&reg=3&lang=1

***

SS/LN/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2337019) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , English , Gujarati , Urdu , हिन्दी , Assamese